இதுக்கெல்லாம் கொடுப்பினை வேணும்.. ஒரே குடும்பத்தைச் சார்ந்த நான்கு தலைமுறையினர் கொண்டாடிய பொங்கல் பண்டிகை!

பொங்கல் பண்டிகையானது உலகம் முழுவதிலும் உள்ள தமிழர்களால்  நேற்று முதல் கொண்டாடப்பட்டு வருகின்றது.

தீபாவளியைக் காட்டிலும் பொங்கல் பண்டிகையின்போது அனைவரும் தங்களது சொந்த ஊருக்குச் சென்று குடும்பத்தினருடன் கொண்டாடுவது வழக்கம்.

கன்னியாகுமரியில் ஒரே குடும்பத்தைச் சார்ந்த நான்கு தலைமுறையினர் ஒன்றாக பொங்கல் பண்டிகை கொண்டாடிய செய்தி மக்கள் மத்தியில் ஆச்சரியமான ஒன்றாக உள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ல நித்திர விளை என்ற பகுதியில் ஒரே குடும்பத்தைச் சார்ந்த 4 தலைமுறையினர் ஒன்றாகப் பொங்கல் பண்டிகை கொண்டாடி உள்ளனர்.

தாத்தா, பாட்டி, அவர்களின் மகன் வழிப் பேரன்கள், பேத்திகள், மகள் வழிப் பேரன், பேத்திகள் என மொத்தமாக 70க்கும் மேற்பட்டோர் ஒன்றாக ஒரே வீட்டில் பொங்கல் கொண்டாடி உள்ளனர்.

முதல் தலைமுறையினருக்கு இரண்டாவது, மூன்றாவது மற்றும் நான்காவது தலைமுறையினர் புத்தாடைகளைப் பரிசாக அளித்து அவர்களிடம் ஆசிர்வாதம் வாங்கியுள்ளனர்.

மேலும் அவர்களே ஒன்றாக சமைத்து அனைவருக்கும் விருந்து படைத்துக் கொண்டாடி உள்ளனர். இறுதியாக மொத்த குடும்பமும் புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளனர்.

இந்த செய்தி வெளியாக இதற்கெல்லாம் கொடுப்பினை வேணும்னு மக்கள் கூறி வருகின்றனர்.

 

 

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.