பொங்கலை ஒட்டி அனைத்து கோவில்களிலும் தரிசிக்க நான்கு நாட்கள் தடை

பொங்கல் பண்டிகை வரும் ஜனவரி 14ம் தேதி வருகிறது.அதன் பிறகு மாட்டுப்பொங்கல், காணும் பொங்கல், என வரிசையாக வர இருக்கிறது.

மற்ற பண்டிகைகளை விட பொங்கல் பண்டிகையைத்தான் அதிகம் விரும்பி 3 நாட்களுக்கு கொண்டாடுவார்கள்.காரணம் என்னவென்றால் தொடர் விடுமுறை தான் காரணம்.

இந்த மூன்று நாட்களும் ஆன்மிக யாத்திரை குடும்பத்துடன் செல்வது, கொடைக்கானல், ஊட்டி என கோடை வாசஸ்தலங்களுக்கு செல்வது என தங்களது பொழுதை மக்கள் கழிப்பர்.

தற்போது கொரோனா பரவல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளது

தற்போது வாரம் மூன்று நாட்கள் கோவில்கள் நடை அடைக்கப்பட்டுள்ள நிலையில் வரும் பொங்கலுக்கு பக்தர்கள் கோவில்களில் குவிவார்கள் என்று மூன்று நாட்கள் மட்டுமல்லாமல் 14ம் தேதி முதல் 18ம் தேதி வரை கோவிலை அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment