பொங்கல் ஜனவரி 14 வருகிறதா? ஜனவரி 15 வருகிறதா- சங்கரமடம் கூறியுள்ள புதிய தகவல்

நாடெங்கும் பொங்கல் பண்டிகை நாளை மறுநாள் அதாவது ஜனவரி 14 அன்று கொண்டாடப்படுகிறது . இந்த நாளில் பொங்கல் வைத்து சூரிய பகவானை மக்கள் வழிபடுவர்.

இந்த நிலையில் காஞ்சி சங்கர மடம் வெளியிட்டுள்ள பஞ்சாங்க குறிப்புகளின் அடிப்படையில் சூரிய உதயத்தை வைத்து கணக்கிட்ட நிலையில்,

சென்னை , எண்ணூர், செங்கல்பட்டு, மாமல்லபுரம்,திருவள்ளூர், காஞ்சிபுரம், அரக்கோணம், ஆற்காடு, ஆரணி, வேலூர், வாணியம்பாடி, ஜோலார்பேட்டை, ஓசூர் ஆகிய பகுதிகளில்  தை மாத சங்கராந்தி துவங்குதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் மதுராந்தகம் வந்தவாசி, திண்டிவனம், திருவண்ணாமலை, ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, உட்பட தமிழகத்தின் அனைத்து பகுதிகளில் ஜனவரி 14ல் சங்கராந்தி துவங்குவதாக அறிவித்துள்ளது.

அதனால் குறிப்பிட்ட பகுதிகளில் இருப்பவர்கள் குறிப்பிட்ட தேதிகளில் பொங்கலை கொண்டாடலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment