‘வாக்கு வங்கி இல்லாத இடதுசாரிகள்’… ஒத்த ஓட்டு பாஜக தலைவர் விமர்சனம்!
அமித்ஷா புதுச்சேரிக்கு வருகை தருவது பாஜக வளர்ச்சிக்கு உத்வேகத்தை தரும் என பாஜக தலைவர் சாமிநாதன் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் தேசிய ஜனநாயக ஆட்சி அமைந்த பின்பு முதல் முறையாக புதுச்சேரிக்கு வரவுள்ள அமித்ஷாவை வரவேற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரிக்கு வருகை தரும் அமித்ஷா மகாகவி பாரதியார் இல்லத்திற்கு செல்கின்றார்.
புதுச்சேரியில் புதிதாக தேர்வு செய்த 390 காவலர்களுக்கான பணியானையை அமீத்ஷா வழங்கவுள்ளார்.
புதுச்சேரி பாஜக மாநில தலைமை அலுவலகத்திற்கு வருகை தந்து அனைத்து மட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்கின்றார். அமித்ஷா புதுச்சேரிக்கு வருகை தருவது பாஜக வளர்ச்சிக்கு உத்வேகத்தை தரும் என பாஜக மாநில தலைவர் சாமிநாதன் பேட்டி.
வாக்கு வங்கி இல்லாத இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம் ஏமாற்று வேலை என புதுச்சேரி மாநில பாஜக தலைவர் சாமிநாதன் குற்றச்சாட்டு.
