ரங்கசாமி ஆட்சி தொடர மத்திய அரசு ஒத்துழைக்கனும்… உள்துறை அமைச்சர் ஓபன் டாக்!
புதுச்சேரியில் ரூ.70 கோடியில் புதிய புறநகர் பேருந்து நிலையம் கட்ட அமித்ஷா அடிக்கல் நாட்ட உள்ளதாக நமச்சிவாயம் அறிவித்துள்ளார்.
புதுச்சேரியில் சுமார்ட்சிட்டி திட்டத்தில் குமரகுருபள்ளத்தில் அடுக்குமாடி கட்டிடம் கட்டவும், கிழக்கு கடற்கரை சாலையில் ரூ.70 கோடியில் புதிய புறப்பேருந்து நிலையம் கட்டவும், ரூ.30 கோடி செலவில் புதுச்சேரி விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலை போடும் பணியையும் தொடங்கி வைக்கின்றார் என உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார்.
புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி தலைவர் ரங்கசாமி தலைமையில் தேசிய ஜனநாயக ஆட்சி தொடர்ந்து செயல்படும் என்றும் அதற்கு பாஜகவும் மத்திய அரசும் உறுதுணையாக இருக்கும் எனத் தெரிவித்தார்.
