Connect with us

தமிழகத்தை முந்திய புதுச்சேரி; பதினொன்றாம் வகுப்பு தேர்வு முடிவுகள்!!

pondicherry

தமிழகம்

தமிழகத்தை முந்திய புதுச்சேரி; பதினொன்றாம் வகுப்பு தேர்வு முடிவுகள்!!

இன்றைய தினம் தமிழகத்தில் பதினோராம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. இதில் 90 சதவீதத்திற்கும் அதிகமான மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளதாக தெரிகிறது.

அதிலும் குறிப்பாக மாணவர்களை விட மாணவிகள் 10 சதவீதத்திற்கும் அதிகமான பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இதே நாளில் இன்றைய தினம் புதுச்சேரியிலும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.

அங்கு தமிழகத்தை விட சற்று அதிகமான பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக தெரிகிறது. அதன்படி புதுச்சேரியில் பதினொன்றாம் வகுப்பு பொதுத் தேர்வில் 90.90 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

புதுச்சேரியில் பதினோராம் வகுப்பு பொதுத்தேர்வில் 14 ஆயிரத்து 845 பேர் தேர்வு எழுதியதில் அதில் 13 ஆயிரத்து 494  பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். புதுச்சேரியில் பதினோராம் வகுப்பு பொதுத் தேர்வில் 82.27 சதவீத அரசு பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளன.

புதுச்சேரியில் மொத்தமுள்ள 125 பள்ளிகளில் 58 பள்ளிகள் பதினோராம் வகுப்பு பொதுத் தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top