வெஸ்ட் இண்டீஸ் தோத்து போக முக்கிய காரணமாக இருந்த பொல்லார்ட்.. அவரு முகத்துல சந்தோசத்தை பாக்கணுமே..

கடந்த ஒரு சில ஐசிசி தொடர்களில் வெஸ்ட் இண்டீஸ் அணி பெரிய அளவில் லீக் சுற்றுக்கு கூட தகுதி பெறாமல் வெளியேறி இருந்த நிலையில் அதிக விமர்சனத்தையும் அவர்கள் சந்தித்திருந்தனர். அணிக்குள் ஏராளமான குழப்பங்களும் உருவாகி இருந்த நிலையில், இந்த ஆண்டு டி20 உலக கோப்பையை நடத்தும் வாய்ப்பும் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு கிடைத்திருந்தது.

சொந்த நாட்டில் உலகக்கோப்பை நடைபெறுவதால் நிச்சயம் முந்தைய தொடர்களில் தொடர் தோல்விகள் பற்றிய விமர்சனங்கள் அனைத்திற்கும் இந்த முறை நிச்சயம் தகுந்த பதிலடியை வெஸ்ட் இண்டீஸ் கொடுக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. அந்த வகையில் வெஸ்ட் இண்டீஸ் அணி லீக் சுற்றில் தங்கள் ஆடியிருந்த நான்கு போட்டிகளிலும் வெற்றி பெற்று இருந்ததுடன் அந்த பிரிவில் முதலிடத்தையும் பிடித்திருந்தது.

நியூசிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட அணிகளை தோற்கடித்திருந்த வெஸ்ட் இண்டீஸ் அணி சூப்பர் 8 சுற்றில் குரூப் 2வில் இடம் பிடித்திருந்தது. இதில் அவர்களை தவிர இங்கிலாந்து, சவுத் ஆப்பிரிக்கா மற்றும் அமெரிக்கா ஆகிய அணிகளும் இடம்பெற்றிருந்தது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு ஒவ்வொரு போட்டியும் சவால் நிறைந்ததாக இருக்கும் நிலையில் தங்களின் முதல் சூப்பர் 8 போட்டியில் இங்கிலாந்து அணியையும் அவர்கள் எதிர்கொண்டிருந்தனர்.

இந்த போட்டியில் முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 180 ரன்கள் எடுத்திருந்தது. பேட்டிங் செய்த அனைவருமே தங்களின் பங்களிப்பை அளித்ததால் நல்ல ரன்னையும் எட்டி இருந்தனர். ஆனால் இதனைத் தொடர்ந்து இலக்கை நோக்கி ஆடியிருந்த இங்கிலாந்து அணி ஆரம்பத்திலிருந்து அதிரடி காட்டியதால் 18 வது ஓவரில் இலக்கை எட்டி அசத்தியிருந்தனர்.

தொடக்க வீரர் பிலிப் சால்ட் 47 பந்துகளில் 5 சிக்ஸர்களுடன் 87 ரன்கள் எடுத்து கடைசி வரை அவுட்டாகாமல் களத்தில் இருந்தார். அவருடன் அதிரடி காட்டி இருந்த பேர்ஸ்டோ 48 ரன்கள் எடுக்க இங்கிலாந்து அணி சூப்பர் 8 சுற்றை வெற்றியுடன் தொடங்கியுள்ளது.

8 டி 20 சர்வதேச போட்டிகளை தொடர்ந்து வெற்றி பெற்று வந்த வெஸ்ட் இண்டீஸ் பயணத்திற்கு இங்கிலாந்து முட்டுக்கட்டை போட்டுள்ளது. இந்த தோல்வியால் வெஸ்ட் இண்டீஸ் அணி துவண்டு போகாமல் நிச்சயம் அடுத்த முக்கியமான இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறுவதிலும் தீவிரம் காட்டுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

அப்படி இருக்கையில் வெஸ்ட் இண்டீஸ் அணி தோல்வியை நெருங்கிய சமயத்தில் அதன் முன்னாள் வீரரான பொல்லார்டு ரியாக்ஷன் தொடர்பான புகைப்படங்கள் அதிகம் வைரலாகி வருகிறது தற்போது இங்கிலாந்து அணியின் பேட்டிங் ஆலோசகராக இருக்கும் பொல்லார்டு, தன் பேட்டிங் பயிற்சியால் இங்கிலாந்து அணி வென்றதை வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக சிறப்பாக கொண்டாடி இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...