Connect with us

வேட்புமனு தாக்கலுக்கு கடைசி நாள்! விதவிதமான வேட்பாளர்களை களமிறக்கும் அரசியல் கட்சிகள்!! வெற்றி பெறுவார்களா?

polii

Tamil Nadu

வேட்புமனு தாக்கலுக்கு கடைசி நாள்! விதவிதமான வேட்பாளர்களை களமிறக்கும் அரசியல் கட்சிகள்!! வெற்றி பெறுவார்களா?

வேட்புமனு தாக்கலுக்கு கடைசி நாள்! விதவிதமான வேட்பாளர்களை களமிறக்கும் அரசியல் கட்சிகள்!! வெற்றி பெறுவார்களா?

நம் தமிழ்நாட்டில் நடப்பு மாதம் 19ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக இன்றைய தினமே வேட்புமனு தாக்கல் செய்வதற்கு கடைசி நாள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால் தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் தீவிரமாக இன்றைய தினம் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்கிறார்கள்.

அந்த வரிசையில் திமுக சார்பில் சட்டக்கல்லூரி மாணவி தனது வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளார். அதன்படி திமுக சார்பில் ஓசூர் மாநகராட்சி 13வது வார்டில் போட்டியிட சட்ட கல்லூரி மாணவி தனது வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளார்.

நகர்ப்புற உள்ளாட்சிதேர்தலில் அதிக அளவு முக்கியத்துவம் பற்றி இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பாரதிய ஜனதா கட்சி சார்பில் நிறைமாத கர்ப்பிணி போட்டியிட உள்ளார். அதன்படி மதுரை மாநகராட்சி 75 வது வார்டில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் நிறைமாத கர்ப்பிணி உமையால் போட்டியிடுகிறார்.

இவ்வாறு இருப்பினும் திருநங்கைகளுக்கும் ஆங்காங்கே இட ஒதுக்கீடுகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் திருநங்கை போட்டியிடுகிறார். சேலம் மாநகராட்சி 18வது வார்டில் போட்டியிட்ட திமுக தேமுதிக சார்பில் திருநங்கை ராதிகா வேட்புமனு தாக்கல் செய்கிறார்.

அதிமுக சார்பில் புதுமாப்பிள்ளை வேட்பு மனுதாக்கல் செய்துள்ளார். மதுரை மாவட்டம் மேலூர் நகராட்சியில் 21 வார்டுகள் புதுமாப்பிள்ளை திவாகரன் அதிமுக சார்பில் வேட்பு மனுதாக்கல் செய்துள்ளார். முன்னாள் எம்எல்ஏ தமிழரசன் மகனான திவாகரனுக்கு நாளை மறுநாள் திருமணம் நடைபெற உள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Tamil Nadu

To Top