100 நாள் வேலைத்திட்டம்; பிரதமருக்கு கடிதம் ஒரு அரசியல் நாடகம்! மத்திய அமைச்சர் முருகன்;

சில நாட்களுக்கு முன்பாக தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதினார். அந்த கடிதம் என்னவென்றால் தமிழகத்தில் 100 நாள் வேலைத்திட்டத்திற்கு ஊதியத் தொகை நிலுவையில் உள்ளதாக குறிப்பிட்டு இருந்தார்.100 நாள் வேலை

இதுகுறித்து தற்போது மத்திய அமைச்சர் முருகன் கூறியுள்ளார். அதன்படி 100 நாள் வேலை திட்டத்தில் தமிழகத்தில் 246 கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளது என்று அவர் குற்றச்சாட்டை வைத்துள்ளார்.

ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு இரண்டு தவணைகளாக 6255 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது என்றும் மத்திய அமைச்சர் முருகன் கூறியுள்ளார். 100 நாள் வேலைத்திட்டத்தில் ஊதியம் தர தமிழக அரசு கடிதத்தில்  1178 கோடி ரூபாய் கேட்டு உள்ளது.

முருகன் ஆனால் மத்திய அரசோ 1361 கோடி ரூபாய் கொடுத்துள்ளது என்று மத்திய அமைச்சர் முருகன் குறிப்பிட்டுள்ளார். மத்திய அரசு முறையாக நிதி ஒதுக்கினாலும் அரசியல் நாடகத்திற்காக பிரதமருக்கு முதல்வர் கடிதம் எழுதியுள்ளார் என்று மத்திய அமைச்சர் முருகன் கூறியுள்ளார்.

மீனவர் பிரச்சினையை வைத்து திமுக அரசியல் செய்ய நினைப்பதாக மத்திய அமைச்சர் முருகன் குற்றசாட்டு வைத்துள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment