Connect with us

சாப்பாடு வேணுமா.. அப்போ கொரோனாத் தடுப்பூசி போட்டுட்டு வாங்க. நூதன முறையினைக் கையில் எடுத்த போலந்து உணவகங்கள்!

Untitled 82

செய்திகள்

சாப்பாடு வேணுமா.. அப்போ கொரோனாத் தடுப்பூசி போட்டுட்டு வாங்க. நூதன முறையினைக் கையில் எடுத்த போலந்து உணவகங்கள்!

சாப்பாடு வேணுமா.. அப்போ கொரோனாத் தடுப்பூசி போட்டுட்டு வாங்க. நூதன முறையினைக் கையில் எடுத்த போலந்து உணவகங்கள்!

கொரோனாத் தொற்றினைக் கட்டுக்குள் வைக்க நம்மிடம் இருக்கும் ஒரு பெரிய தீர்வு கொரோனாத் தடுப்பூசிதான்.

அதனால்தான் கொரோனாத் தடுப்பூசியை செலுத்துவதில் உலக நாடுகள் அனைத்தும் மும்முரமாகச் செயல்பட்டு வருகின்றது.

அதன்படி ஐரோப்பிய நாடுகளில் கொரோனாத் தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகின்றது.

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான போலந்தில் கொரோனாத் தடுப்பூசி செலுத்தியோர் 56 சதவீதம் ஆகும். மிகக் குறைவான அளவில் தடுப்பூசி செலுத்தியதாலோ என்னவோ போலந்தில் தினசரி கொரோனா பாதிப்பு 30,000 ஐத் தாண்டியுள்ளது.

கொரோனாப் பாதிப்பினை கட்டுக்குள் வைக்க போலந்து அரசு கட்டுப்பாடுகளை விதிக்காதது குறித்து கடும் விமர்சனங்கள் எழுந்த நிலையில் வார்சா நகர உணவகங்கள் தடாலடி முடிவினை எடுத்துள்ளன.

அதன்படி தடுப்பூசி போட்டுள்ள வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே உணவகங்களில் அனுமதி என்று அறிவித்துள்ளது.

அதன்படி வாடிக்கையாளர்கள் உணவகங்களுக்கு வரும்போது கொரோனாத் தடுப்பூசி சான்றிதழ்களை கொண்டு வரவேண்டும் என்றும் கூறியுள்ளனர்.

இந்த முடிவு மக்கள் மத்தியில் எதிர்ப்பினைச் சந்தித்தாலும் வேறு வழியின்று கொரோனாத் தடுப்பூசி போட பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருவதாகக் கூறப்படுகின்றது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top