தாய்மார்களுக்கு முக்கிய அறிவிப்பு!! நாளை தொடங்குகிறது போலியோ சொட்டு மருந்து முகாம்..
கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம் நடைபெறுவது தள்ளிவைக்கப்பட்டது. இந்த நிலையில் நாடு முழுவதும் நாளை ஒரே கட்டமாக போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.
அந்த வகையில் 5 வயதுக்குட்பட்ட சுமார் 70 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க தமிழகத்தல் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் என 43,051 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இதனிடையே தொலைதூர பயணங்களில் செல்லம் பெற்றோர்களுக்கு பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள், சோதனைச்சாவடிகள் ஆகிய இடங்களில் சொட்டு மருந்து வழங்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
மேலும், சொட்டு மருந்து செலுத்தப்பட்ட குழந்தைகளுக்கு அடையாள மை வைக்கப்பட்டு, விடுபட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து போட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்துள்ளது.
