Connect with us

பெண்ணை வைத்து விபச்சார தொழில்: வசமாக சிக்கிய காவலர் கைது!!

sexual harassment

தமிழகம்

பெண்ணை வைத்து விபச்சார தொழில்: வசமாக சிக்கிய காவலர் கைது!!

மதுரையில் பெண்ணை வைத்து பாலியல் தொழில் ஈடுப்பட்ட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மதுரை புதூர் ஆண்டியூர் காலனியில் இருக்கக்கூடிய பகுதியில் விபச்சாரம் நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. விபச்சார தடுப்பு பிரிவு மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.

அப்போது அங்கு விபச்சாரம் நடைபெறுவது போலீசாரால் உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து பெண் உட்பட 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். பின்னர் பெண்ணிடம் விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

அதன் படி, குடும்ப சூழ்நிலையை காரணமாக வைத்து, ஆசைவார்த்தைகளை கூறி அப்பெண்ணை விபச்சாரத்தில் ஈடுபட 2 பேர் கட்டாயப்படுத்தியதாக கூறியுள்ளார். அப்பெண் அளித்த புகாரின் அடிப்படையில் காவலர் தேவேந்திரன் மற்றும் காசி ஆகிய இரண்டு பேரை போலீசார் கைதுசெய்துள்ளனர்.

மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணை பெண்கள் காப்பகத்தில் சேர்க்கப்பட்ட நிலையில் மதுரை தல்லாகுளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாக தெரிகிறது.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top