உஷாரய்யா.. உஷாராரு… சைபர் க்ரைம் காவல்துறை விடுத்த எச்சரிக்கை!
ஆன்லைன் மோசடிகள் மற்றும் திருட்டுக்கள் தொடர்பாக தமிழ்நாடு சைபர் க்ரைம் போலீசார் தொடர்ந்து சோசியல் மீடியாவில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். தற்போது தினந்தோறும் கம்ப்யூட்டரை பயன்படுத்தும் போது கருத்தில் கொள்ள வேண்டிய பாதுகாப்பு அம்சங்கள் குறித்து அறிவுறுத்தியுள்ளார். அவை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
1.வரையறுக்கப்பட்ட சலுகைகளுடன் சமூகவலைதளக் கணக்கைப் பயன்படுத்தவும் மற்றும் தினசரி பயன்பாட்டிற்கு நிர்வாகியை (admin) அணுகுவதைத் தவிர்க்கவும்.
2.இயக்க அமைப்பு(Operating System) , பயன்பாட்டு மென்பொருள் (Application Software) மற்றும் கணினி-நச்சுநிரல் (Anti-Virus) மென்பொருளை தொடர்ந்து புதுப்பிக்கவும்.
3.முக்கியமான கோப்புகளை குறிப்பிட்ட கால இடைவெளியில் காப்புப் பிரதி(Backup) எடுக்கவும்.
4.யாரும் பயன்படுத்தாத நிலையில் கணினியை கவனிக்காமல் விட்டுவிடாதீர்கள்.
5.கணினியிலிருந்து தேவையற்ற நிரல்கள் அல்லது சேவைகளை அகற்றவும்.
6.அங்கீகரிக்கப்படாத நிரல்கள், கணினியை அணுகுவதைத் தடுக்க, பயன்படாத கோப்புகள் அல்லது தரவுகளை அகற்றவும்.
7.இணையதளங்கள் அல்லது தெரிந்த ஆதாரங்கள்/நபர்களின் மின்னஞ்சல்களிலிருந்துபெறப்பட்ட இணைப்புகளில் இருந்து நீங்கள் பதிவிறக்கம் செய்யும் அனைத்து கோப்புகளையும் நுட்பமான சோதனை (Scan) செய்யவும்.
8.இணையத்தில் இருந்து அறிமுகமில்லாத மென்பொருளை பதிவிறக்கம்(Download) செய்ய வேண்டாம்.
