வேலை நேரத்தில் போலீசார் செல்போன் பயன்படுத்த கூடாது! மீறினால் நடவடிக்கை;
நம் தமிழகத்தில் பணி நேரங்களின் போது அதிக அளவு கைபேசி பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகமாக காணப்படுகிறது. அதிலும் குறிப்பாக அரசு பணியில் இருக்கும் ஊழியர்கள் இத்தகைய செயலில் அதிகளவில் ஈடுபடுகின்றனர்.
இத்தகைய செயலை தடுக்கும் விதமாக இரண்டு நாட்களுக்கு முன்பு சென்னை உயர்நீதிமன்றம் பணி நேரங்களில் அரசு ஊழியர்கள் தங்களது சொந்த தேவைக்காக கைப்பேசியினை பயன்படுத்தக் கூடாது என்று உத்தரவிட்டு இருந்தது.
இந்த நிலையில் இந்த உத்தரவு போலீசாருக்கும் பொருந்தும் போல காணப்படுகிறது. அதன்படி பணி நேரத்தில் போலீசாரும் செல்போன் பயன்படுத்தக் கூடாது என்று கூறியுள்ளது.
காவல்துறையினர் பணியாளர்கள் பணி நேரத்தில் செல்போன் பயன்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை கூறியுள்ளது. உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவை தொடர்ந்து ஆவடி காவல் ஆணையர் சந்தீப் ரத்தோர் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார். உத்தரவை மீறி செல்போன் பயன்படுத்தும் போலீசார் மீது அரசு ஊழியர் நடத்தை விதிகள் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆணையர் கூறினார்.
