‘எதற்கும் துணிந்தவன்’ வீட்டில் போலீஸ் பாதுகாப்பு !! பின்னணி என்ன ?
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சூர்யா. சமீபத்தில் இவர் நடித்த ஜெய் பீம் திரைப்படத்தில் வன்னியர் சங்கத்தை இழிவுபடுத்தியதாக தமிழகமெங்கும் பெரும் சர்ச்சை கிளம்பியது.
இதனால் தமிழகமெங்கும் போராட்டங்கள் நடத்தி வந்த நிலையில் அதற்காக நடிகர் சூர்யா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார்.
அதற்கு தன் தரப்பு நியாத்தை வெளியிட்டு இருந்தாரே தவிர சூர்யா மன்னிப்பு கேட்கவில்லை. இதனால் வன்னியர் சமூகத்தினர் மற்றும் பாமகவினர் சூர்யாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து மாவட்டங்கள் தோறும் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் போராட்டங்களில் ஈடுப்பட்டு வந்தனர்.
இதனை தொடர்ந்து சூர்யா நடித்து ஜெய் பீம் திரைப்படம் தியேட்டர்களில் ரகளைகளில் ஈடுப்பட்டனர். இதனால் சூர்யாவின் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. தற்போது இந்த விவகாரம் கொஞ்சம் அடங்கியுள்ளது.
இந்நிலையில் சூர்யா நடித்த எதற்கும் துணிந்தவன் திரைப்படம் நாளைக்கு திரைக்கு வர இருக்கிறது. இதில் சூர்யா மன்னிப்பு கேட்டால்தான் படத்தை வெளியிட வேண்டும் என்று திரை உரிமையாளர்கள் சங்கத்தினரிடம் பாமக மாணவர்கள் சங்கம் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
மேலும், பல்வேறு மாவட்டங்களில் பாமகவினர் சூர்யாவின் படத்தை வெளியிட கூடாது என மிரட்டி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கு தமிழ்நாடு முற்போக்கு கலைஞர் எழுத்தாளர் சங்கம் கண்டனம் தெரிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
