#Breaking அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு ; 6 மாத குழந்தை உட்பட 6 பேர் கொலை!

அமெரிக்காவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் குழந்தை உட்பட 6 பேர் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் அதிகாலை 3.30 மணி அளவில் வீடு ஒன்றிற்குள் நுழைந்த போதை கடத்தல் கும்பல் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது சரமாரி துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளது.

இந்த கோர சம்பவத்தில் அலிசா பாராஸ்  என்ற 17 வயது இளம் பெண்ணும்  அவரது 6 மாதக்குழந்தையான நிக்கோலஸ் நோலன் பராஸ்  உட்பட 6 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

காவல்துறை அதிகாரிகள் தகவலின் படி, இருவரது உடல் தெருவிலும், ஒருவர் வீட்டிற்குள் நுழையும் வழியிலும் சுடப்பட்டு சடலமாக கிடந்துள்ளனர். வீட்டிற்குள் 17 வயது இளம் பெண், அவளுடைய 6 மாத கைக்குழந்தை மற்றும் ஒரு ஆண் சுடப்பட்டு சடலமாக கிடந்துள்ளனர். இதில் ஆண் ஒருவர் மட்டும் உயிருடன் இருந்ததாகவும், ஆனால் அவர் மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.