பிரபல நடிகர் மற்றும் நடிகரின் மகன் மீது காவல்நிலையத்தில் புகார்….! கோலிவுட்டில் பரபரப்பு……!

கோலிவுட்டில் பிரபல குணச்சித்திர நடிகர் மற்றும் இயக்குனர் என பல பரிமாணங்களில் இருப்பவர் தான் நடிகர் தம்பி ராமையா. இவர் அஜித் விஜய் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிந்து அசத்தி வருகிறார். மேலும் பல படங்களில் காமெடி கேரக்டரிலும் நடித்து வருகிறார்.

தம்பி ராமையா

இவரது மகன் உமாபதியும் நடிகர் தான். சமீபத்தில் இவர் நடிப்பில் தண்ணி வண்டி என்ற படம் வெளியானது. மேலும் பிரபல நடிகர் ஆக்சன் கிங் அர்ஜூன் தொகுத்து வழங்கிய சர்வைவர் நிகழ்ச்சியிலும் உமாபதி பங்கேற்று பிரபலமானார். இந்நிலையில், நடிகர் தம்பி ராமையா மற்றும் அவரது மகன் உமாபதி மீது சென்னை பெரு நகர காவல் ஆணையர் அலுவலகத்தில் தயாரிப்பாளர் சவரணன் புகாரளித்துள்ளார்.

இதுகுறித்து தயாரிப்பாளர் சரவணன் கூறியதாவது, “கடந்த 2015 ஆம் ஆண்டு நான் ஒரு படம் எடுக்க தீர்மானித்து இருந்தேன். அப்போது தன் மகனை நடிகராக நடிக்கவைப்பதாகவும் அதற்கான அனைத்துப் பொறுப்புகளையும் தானே ஏற்றுக் கொள்வதாகவும் தம்பி ராமையா என்னிடம் கூறினார். அதன்படி ஜூன் மாதம் படத்திற்கான பணிகளை தொடங்கினேன்.

இப்படத்தை 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வெளியிடலாம் என முடிவு செய்து வைத்திருந்தேன். ஆனால் ஹீரோவாக நடிக்க நடிகர் உமாபதியை பலமுறை அழைத்தும் அவர் படப்பிடிப்பிற்கு வரவில்லை. அவரும் அவரது தந்தை தம்பி ராமையாவும் சேர்ந்து என்னை நஷ்டமடைய வைக்க வேண்டும் என்பதற்காகவே செயல்படுகிறார்கள்” என கூறியுள்ளார்.

பிரபல நடிகராக வலம் வரும் தம்பி ராமையா மீதும் அவரது மகன் உமாபதி மீதும் தயாரிப்பாளர் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள சம்பவம் கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment