திடீரென 1000 பேர்களை ரயிலில் இருந்து வெளியேற்றிய காவல்துறை: திருவொற்றியூரில் பரபரப்பு!

முன்பதிவு செய்யப்பட்ட இருக்கைகளில் உட்கார்ந்து கொண்டு அடாவடி செய்த சுமார் 1000 பேர் ரயிலில் இருந்து திடீரென இறக்கிவிடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னையிலிருந்து கவுகாத்தி செல்லும் விரைவு ரயிலில் முன்பதிவு பெட்டிகளில் அமர்ந்துகொண்டு இடம் தர மறுத்து அடாவடி செய்த வட மாநிலத்தவர் காரணமாக ரயிலில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

இதனை அடுத்து முன்பதிவு செய்தவர்கள் அளித்த புகாரின்பேரில் திருவொற்றியூரில் ரயில் நிறுத்தப்பட்டது. போலீசார் ரயில்களில் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்த சுமார் ஆயிரம் பேரை மூட்டை முடிச்சுகளுடன் வெளியே தள்ளினர்.

4 பேர் அமரக்கூடிய இடத்தில் 7 பேர் மூட்டை முடிச்சுகளுடன் அமர்ந்து முன்பதிவு செய்தவர்களுக்கு இடம் தராமல் அடாவடி செய்துள்ளனர். இதுபோல் தொடர்ந்து நடப்பதால் இதுகுறித்து ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உரிய டிக்கெட் எடுத்து பயணம் செய்பவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

காவல்துறையினர் சரியான நேரத்தில் வந்து முன்பதிவு செய்யாமலும், டிக்கெட் எடுக்காமலும் ரயிலில் ஏறிய சுமார் ஆயிரம் பேர்களை மூட்டை முடிச்சுகளுடன் வெளியே தள்ளிய சம்பவத்தின் வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.