ரஜினி மகள் நகை திருட்டு வழக்கில் அதிரடி திருப்பம்… ஐஸ்வர்யா வீட்டிற்கு விரையும் காவல்துறை!

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் நகைகள் திருடப்பட்ட வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் ஒருவர் கைது:

சூப்பர் ஸ்டாரின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் நகை திருடப்பட்டதாக தேனாம்பேட்டை காவல்நிலையத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு புகார் அளிக்கப்பட்டது. இதுகுறித்து விசாரணையை தொடங்கிய போலீசார், ஐஸ்வர்யா வீட்டில் பணியாற்றி வந்த ஈஸ்வரி என்பவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்து விசாரணை நடத்தினர்.

அப்போது ஈஸ்வரி நகையை திருடி சோழிங்கநல்லூரில் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள சொகுசு வீடு வாங்கியதும், கணவருக்கு மளிகை கடை வைத்துக்கொடுத்ததும் அம்பலமானது. இதனையடுத்து அவரது வீட்டில் நடந்த சோதனையில் ஒரு கோடி ரூபாய்க்கான சொத்து ஆவணம் மற்றும் 20 சவரன் நகைகளை மீட்டனர்.

தற்போது இந்த வழக்கில் மயிலாப்பூரைச் சேர்ந்த வினால்க் சங்கர் நவாலி என்பவரை திருடப்பட்ட நகைகளை வாங்கியதாக தேனாம்ப்பேட்டை போலீசார் கைது செய்துள்ளனர். வினால்க் சங்கர் நவாலியிடம் 340 கிராம் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

ஐஸ்வர்யாவிடம் விசாரணை:

நடிகர் ரஜினி மகள் ஐஸ்வர்யாவிடம் எவ்வளவு நகைகள் திருடப்பட்டது குறித்து போலீசார் நேரில் விசாரணை செய்ய உள்ளனர். திருடப்பட்ட நகைகளின், வாங்கிய ரசீது உள்ளிட்ட ஆவணங்கள் குறித்தும் ஐஸ்வர்யாவிடம் போலீசார் விசாரணை நடத்து உள்ளனர்..

நடிகர் ரஜினி மகள் ஐஸ்வர்யா வீட்டில் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் போலீஸ் விசாரணை தொடர்கிறது. அவர் புகாரில் குறிப்பிட்டுள்ளதை விட கூடுதல் நகைகள் கைப்பற்றப்பட்டுள்ளதால், ஐஸ்வர்யாவின் வீட்டுக்குச் சென்றோ அவரை வரவழைத்தோ விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.

வீட்டுக்கு செல்லும்போது லாக்கரில் உள்ள நகைகள் பற்றி கேட்கவும் திட்டமிட்டுள்ளனர் போலீசில் புகார் அளித்தபோது சௌந்தர்யா திருமணத்தின் போது எடுத்த ஆல்பத்தையும் ஐஸ்வர்யா வழங்கியிருந்தார்

அந்த ஆதாரத்துடன் ஒப்பிட்டு பார்த்து திருடப்பட்ட நகைகளை போலீசார் சரி பார்த்து வருகிறார்கள்.

நீதிமன்றத்தில் ஒப்படைக்க திருடப்பட்ட நகைகளின் ஆவணங்கள் குறித்தும் ஐஸ்வர்யாவிடம் போலீசார் விசாரணை நடத்து உள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.