பட்டாசு வெடி விபத்து: பதுங்கி இருந்த ஓனரை பாய்ந்து பிடித்த தனிப்படை போலீஸ்!

தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டமும் சிறப்பு தொழிலை பெற்று காணப்படும். அவற்றுள் தொழில் மாநகரமாக காணப்படுகின்ற மாவட்டம் எது என்றால் விருதுநகர் என்று கூறலாம். ஏனென்றால் விருதுநகரில் உள்ள பெரும்பாலான நகரங்களில் பட்டாசு தொழிற்சாலைகள் ஏராளமாகக் காணப்படும்.

இந்த பட்டாசு தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படும் பட்டாசுகள் தமிழகம் மட்டுமின்றி இந்தியாவில் உள்ள பல மாநிலங்களுக்கும் வினியோகம் செய்யப்படும். என்னதான் விருதுநகர் மாவட்டம் முழுவதும் பட்டாசு ஆலைகள் அதிகமாக காணப்பட்டாலும் அதனை விட அதிகமாக பட்டாசு ஆலை விபத்து நிகழ்ந்து கொண்டேதான் உள்ளது.

அதோடு மட்டுமில்லாமல் உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் அதிகமாகவே நிகழ்கிறது. இந்த சூழலில் பட்டாசு ஆலை விபத்து தொடர்பாக உரிமையாளர் ஒருவர் கைதாகியுள்ளார். இந்த சம்பவம் சாத்தூர் அருகே நிகழ்ந்துள்ளது. அதன்படி சாத்தூர் அருகே மஞ்சள்ஓடைப்பட்டியில்  கடந்த ஐந்தாம் தேதி ஏற்பட்ட பட்டாசு ஆலை வெடி விபத்து வழக்கில் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

விஜயகரிசல்குளத்தில் உறவினர் வீட்டில் பதுங்கியிருந்த பூமாரியை தனிப்படை காவல்துறையினர் கைது செய்தனர். வெடி விபத்தில் 5 பேர் உயிரிழந்த வழக்கில் ஆறுமுகம், நாகேந்திரன், பரமேஸ்வரனை காவல்துறை தீவிரமாக தேடி கொண்டு வருகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment