Connect with us

கொரோனாவால் பலியானவருக்கு கிடைத்த ரூ.60 லட்சம்: இரு மனைவிகளும் பங்கு கேட்பதால் பரபரப்பு

News

கொரோனாவால் பலியானவருக்கு கிடைத்த ரூ.60 லட்சம்: இரு மனைவிகளும் பங்கு கேட்பதால் பரபரப்பு

09ca834a2cd9902dceb579eebeac7297

மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனாவால் பலியானவர்களுக்கு கிடைத்த இழப்பீடு தொகையான 60 லட்சத்தை இரண்டு மனைவிகளும் உரிமை கொண்டாடி வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த மே மாதம் முப்பதாம் தேதி ரயில்வேயில் பணி புரிந்த ஒருவர் திடீரென கொரோனாவால் காலமானார். அவரது குடும்பத்திற்கு ரூபாய் 60 லட்சம் நிதி இழப்பீடு வழங்கப்பட்டது

இந்த நிலையில் அவரது மனைவி மற்றும் மகள் ஆகியோர் அந்த நிதியை பெற காத்திருந்த நிலையில் திடீரென மறைந்த சப்-இன்ஸ்பெக்டருக்கு தானும் ஒரு மனைவி என்றும் தனக்கும் பங்கு வேண்டும் என்றும் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

இதுகுறித்து போலீசார் விசாரணை செய்தபோது மறைந்த சப்-இன்ஸ்பெக்டருக்கு இரண்டு மனைவிகள் இருப்பது உண்மை என்பது தெரியவந்தது. இதனை அடுத்து நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடந்தபோது முதல் மனைவி, முதல் மனைவியின் மகள், இரண்டாம் மனைவி, இரண்டாவது மனைவியின் மகள் என நான்கு பேருக்கும் சமமாக பிரித்துக் கொடுக்க வேண்டும் என்று வாதாடப்பட்டது

ஆனால் நீதிமன்றம் இதனை ஏற்கவில்லை. 2வது மனைவிக்கு இழப்பீட்டு தொகையில் பங்கு கிடையாது என்றும் இரண்டாவது மனைவியின் மகள், முதல் மனைவி மற்றும் முதல் மனைவியின் மகள் ஆகிய மூவருக்கும் மட்டும் பிரித்து கொடுக்கலாம் என்றும் ஆலோசனை வழங்கியது

இருப்பினும் இதுகுறித்து முதல் மனைவி தனியாக ஒரு மனுவை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் அதன் அடிப்படையில் இந்த வழக்கின் தீர்ப்பு வழங்கப்படும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கின் தீர்ப்பு எப்படி இருக்கும் என இரு மனைவியின் குடும்பத்தினர் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது

More in News

To Top