
தமிழகம்
டிஜிபி முதல் காவலர்கள் வரை அனைவருக்கும் ‘காவல் பதக்கம்’-ஸ்டாலின்;
இன்றைய தினம் தமிழக காவல்துறையினருக்கு வரலாற்று சிறப்புமிக்க நாளாக அமைந்துள்ளது. ஏனென்றால் 2009 ஆம் ஆண்டு தமிழக காவல்துறை அறிவிக்கப்பட்ட ஜனாதிபதி கொடி இன்றைய தினம் வழங்கப்பட்டது.
இதனை இந்திய குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு தமிழகம் முதலமைச்சர் ஸ்டாலின் இடம் வழங்கினார். மேலும் தமிழக காவல்துறையினர் பற்றியும் சிறப்பாகவும் அவர் பாராட்டும் அளித்தார்.
இவ்வாறு உள்ள நிலையில் தமிழ்நாடு போலீசாருக்கு காவல் பதக்கம் வழங்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார். அதன்படி தமிழ்நாடு காவல்துறையில் டிஜிபி முதல் காவலர்கள் வரை என அனைவருக்கும் காவல் பதக்கம் வழங்கப்படும் என்று கூறியுள்ளார்.
எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு திடலில் நடைபெற்ற தமிழ்நாடு காவல்துறையின் விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் இவ்வாறு அறிவித்தார். தமிழ்நாட்டில் காவல் நிலைய மரணங்கள் குறைந்துள்ளது என்றாலும் இல்லை என்று தான் சொல்லவில்லை என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார்.
காவல் நிலையங்கள் மரணங்கள் முற்றாக தவிர்க்கப்பட வேண்டும் என போலீசாருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். தமிழ்நாடு அமைதியாக இருப்பதால்தான் தொழில்துறையில் முதலீடுகள் குவிந்து வருவதாக முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம் கொண்டுள்ளார்.
