தமிழக காவல்துறையில் பணிபுரியும் பெண் போலீசார் சிறப்பாக பணிபுரிந்து வருவதாக தகவல்கள் வெளியான நிலையில் காவலர் காளீஸ்வரி என்பவர் அரை கிலோமீட்டர் தூரம் திருடனை விரட்டி சென்று பிடித்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை தாம்பரத்தில் இருந்து பயணி ஒருவரிடம் திருடன் திடீரென செல்போனை பறித்துக்கொண்டு சென்றதாக தெரிகிறது. இதனை பார்த்த அங்கிருந்த காவலர் காளீஸ்வரி கொள்ளையனை விரட்டினார். திருடனை காவலர் காளீஸ்வரி விரட்டுவதை அங்கிருந்தவர்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தாலும் மனம் தளராமல் திருடனை விரட்டி சென்ற காளீஸ்வரி அவனை பிடித்து அவனிடம் இருந்த செல்போனை பிடுங்கி அவரை கைது செய்தார்.
இதனை அடுத்து பயணியிடம் செல்போனை பறித்த கொள்ளையன் பெயர் சோட்டோ என்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து அந்த திருடன் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் பேருந்து பயணியிடம் செல்போன் திருடிய கொள்ளையன் சோட்டோவை அரை கிலோ மீட்டர் தூரம் துரத்திச் சென்ற காவலர் காளீஸ்வரிக்கு உயர் அதிகாரிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர். மேலும் அவருக்கு பொன்னாடை போர்த்தி உரிய மரியாதை செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.