7 மாதங்களுக்கு முன் பெண்ணை கொலை செய்த கொலையாளி கைது.. உதவி செய்த செல்போன்!

ஏழு மாதங்களுக்கு முன் சென்னையை சேர்ந்த பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட நிலையில் அவரது செல்போன் உதவியால் தற்போது கொலையாளி கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னையை அடுத்த சேலையூர் என்ற பகுதியில் எஸ்தர் என்ற பெண் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த நிலையில் அந்தப் பெண் பணிமுடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த முடியில் திடீரென மர்ம நபர் ஒருவர் வழிமறித்து கொலைசெய்தார். அவருடைய பர்ஸ், செல்போன் திருடப்பட்டிருந்தது. அதன்பின் பெண்ணின் பிணத்தை புதரில் வீசி விட்டுச் சென்றதாக தெரிகிறது.

mobile phoneஇது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அந்த பெண்ணை கொலை செய்தது யார் என்பது குறித்து விசாரணை செய்து வந்தனர். மேலும் அந்த பெண்ணின் செல்போன் காணாமல் போயிருந்ததை அடுத்து அந்த செல்போன் ஐ.எம்.ஈ எண்ணை வைத்து அந்த போன் செயல்பாட்டில் இருக்கின்றதா? என்பதை யும் காவல்துறையினர் கண்காணித்தனர்.

இந்த நிலையில் கடந்த 7 மாதங்களாக அந்த போன் இயக்கப்படாமல் இருந்த நிலையில் நேற்று அந்த செல்போன் இயக்கப்பட்டது என்பதை காவல்துறையினர் கண்டுபிடித்தனர். இதனையடுத்து உடனடியாக அந்த செல்போன் சிக்னலை வைத்து செல்போன் நபரிடம் விசாரணை செய்தபோது அவர் வேலாயுதம் என்ற நபரிடம் இருந்து இந்த செல்போனை வாங்கியதாக கூறினார்.

உடனடியாக வேலாயுதத்தை விசாரித்த போலீசார் அவர் தான் கொலையாளி என்பதை கண்டுபிடித்து அவரை கைது செய்து உள்ளனர். ஏழு மாதங்களுக்கு முன் கொலை செய்யப்பட்ட பெண் ஒருவரை கொலை செய்த கொலையாளியை செல்போன் உதவியால் காவல்துறையினர் கண்டுபிடித்து கைது செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.