Connect with us

காவல்நிலையத்திலேயே கைவைத்த காவலர்… கையும் களவுமாக கைது!

Police station

செய்திகள்

காவல்நிலையத்திலேயே கைவைத்த காவலர்… கையும் களவுமாக கைது!

காவல்நிலையத்திலேயே கைவைத்த காவலர்… கையும் களவுமாக கைது!

காவல் நிலையத்தில் இருந்த இரு சக்கர வாகனத்தை திருடி விற்க முயன்ற காவலர் உட்பட 3 பேரை மயிலாப்பூர் போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை மயிலாப்பூரில் கபிலன் என்பவர் இருசக்கர வாகனம் பழுது பார்க்கும் கடை நடத்தி வருகிறார். அந்த கடைக்கு இருசக்கர வாகனத்தை கொண்டுவந்த ஜெயச்சந்திரன் என்பவர் தான் காவலர் எனவும் இந்த இரு சக்கர வாகனத்தை விற்று பணம் தருமாறு கூறியுள்ளார்.

அவர் கூறியதில் சந்தேகம் அடைந்த கபிலன், மயிலாப்பூர் காவல் நிலையத்திற்கு இதுகுறித்த தகவல் தெரிவிக்கிறார், உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த காவலர்கள் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல் கிடைத்துள்ளது.

அதாவது கடைக்கு வந்த காவலர்கள் நடத்திய விசாரணையில் மயிலாப்பூர் காவல் நிலையத்தில் வழக்குக்காக பறிமுதல் செய்யப்பட்டு வைக்கப்பட்டு இருந்த இரு சக்கர வாகனத்தை அங்கிருந்து காவலர் ஜெயச்சந்திரன், அவருடைய நண்பர்கள் நாகராஜ், அருண் பிரகாஷ் என்ற மூன்று பேரும் திருடி விற்க முயன்றது தெரியவந்தது.

உடனடியாக இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்த போலீசார் காவலர் ஜெயச்சந்திரன் உட்பட 3 பேரை கைது செய்தனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top