கனவில் எரிந்த பெண் போலீஸ்; பயத்தில் தூக்கில் தொங்கிய போலீஸ்!!

அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பது போல பல பகுதிகளில் பேயின் அச்சம்  தற்போது கூட திகழ்ந்து வருகிறது. இதனால் பல இடங்களில் மக்கள் பலரும் மூட நம்பிக்கைகளில் ஈடுபடத் தொடங்கிவிட்டனர்.

தற்கொலை

 

இந்தநிலையில் காவலர் ஒருவர் தூக்கில் தொங்கியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த பிரபாகர்; கடலூர் மாவட்டத்தில் முதன்மை காவலராக பணியாற்றி வந்தார். இவருக்கு விஷ்ணுபிரியா என்ற மனைவியும், ஒரு மகன், ஒரு மகள் என்ற இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.

சில நாட்களுக்கு முன்பு அவர் தனது மனைவி விஷ்ணுபிரியா மற்றும் குழந்தைகளை ஒரு விழாவிற்கு அனுப்பிவிட்டு தான் தனியாக வீட்டில் இருந்துவிட்டார். பின்னர் மனைவியும் குழந்தைகளும் வந்து பார்த்தபோது பிரபாகர் வீட்டில் தூக்கில் தொங்கியபடி காணப்பட்டார்.

இதனை கண்டு அஞ்சிய மனைவி விஷ்ணுபிரியா உடனடியாக அவரை கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறியுள்ளனர். இதுகுறித்து தீவிர விசாரணை கடலூர் மாவட்ட போலீஸ் அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

பேய் பற்றிய அச்சம் பிரபாகரனுக்கு இருந்ததாக கூறப்படுகிறது. அவரது கனவில் எரிந்த நிலையில் பெண் ஒருவர் அமுக்குவது தோன்றியது. இது குறித்து சக போலீசாரிடம் தன்னை ஏற்கனவே இந்த காவலர் குடியிருப்பில் தீக்குளித்து இறந்த பெண் காவலர் பயமுறுத்தியதாக கூறியிருந்தார்.

அதன் பின்னர் அவர் 15 நாட்கள் மருத்துவ விடுப்பு எடுத்து பூஜை அறையில் இருந்து விட்டார். பின்னர் அவருக்குப் அச்சம் குறைந்த உடன் பணிக்கு திரும்பினார். ஆனால் பணிக்கு திரும்பி முதல் நாளே மீண்டும் அந்தப் பெண் தன் கனவில் வந்து  பிரபாகரை பயமுறுத்தியதாக கூறப்படுகிறது.

இதனால் மறுநாளே அவர் தூக்கில் தொங்கி விட்டார். இதுகுறித்து கடலூர் காவல் அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார். அதோடு மட்டுமில்லாமல் பணிச்சுமையும், அதிகாரிகளின் சுமையும் பிரபாகருக்கு இல்லை என்றும் சக போலீசார் தெரிவித்துள்ளனர். பிரபாகரனின் மரணம் ஒட்டு மொத்த தமிழ்நாடு போலீஸ் மத்தியில் சோகத்தை உருவாக்கியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment