போக்குவரத்திற்கு இடையூறாக சாலையில் நடனமாடியதை கண்டித்த போலீஸ்! போலீசை தாக்கியவர் கைது!!

காவல்துறை உங்கள் நண்பன் என்பதற்கு ஏற்ப பல பகுதிகளில் காவலர்கள் நண்பர்களாக காணப்படுகின்றனர்.ஒரு சில பகுதிகளில் காவலர்கள் பொது மக்களுக்கு பல்வேறு உதவிகளையும் செய்து வருகின்றனர் இத்தகைய காவலர்கள் மீது ஒரு சிலர் தாக்குதல் நடத்துவது வேதனையாக காணப்படுகிறது.

குறிப்பாக சில தினங்களுக்கு முன்பு கோவில்பட்டி பகுதியில் பெண் காவலர் ஒருவரை இறுதிச் சடங்கு ஊர்வலத்தில் சென்றவர்கள் தாக்கியது குறிப்பிடத்தக்கது. பெண் காவலரை தாக்கியவர்களை கைது செய்தனர்.

இந்த நிலையில் மற்றும் ஒரு காவலர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. காவலர் மீது தாக்குதல் நடத்தியவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை கீழ்பாக்கத்தில் சாலை போக்குவரத்திற்கு இடையூறாக சாலையில் நடனம் ஆடியதை கண்டித்த காவலர் மீது தாக்குதல் நடத்தியவர் கைது செய்யப்பட்டுள்ளார். வாக்குவாதத்தில் காவலர் ஆனந்த் வினோத் சிங்கை, அரவிந்தன் ஆபாசமாக பேசி தாக்கியுள்ளார். அரவிந்தனை கைது செய்து கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தப்பியோடிய மணி, அப்புராஜ், சரண் ஆகியோரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment