தோசை சுட்டு தராததால் ஆத்திரத்தில் மனைவி, மருமகள், பேத்தியை கத்தியால்
வெட்டிய தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
தோசை கேட்டு தகராறு:
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே உள்ள என். மோட்டூர் பக்கமுள்ள மேட்டு
கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்தவர் கணேசன் (வயது 60). கூலித் தொழிலாளி.
இவரது மனைவி மாதம்மாள் (50). நேற்று முன்தினம் இரவு கணேசன் வேலை முடிந்து.வீட்டிற்கு வந்தார்.
அப்போது வீட்டில் இருந்த கணேசன் தனக்கு தோசை சுட்டு தரும்படி தனது
மனைவியிடம் கேட்டார். இதையடுத்து மாதம்மாள் 3 தோசைகள் சுட்டுக்
கொடுத்தார்.
அதன் பிறகு கியாஸ் சிலிண்டர் தீர்ந்து விட்டது. எனவே மாதம்மாள் கியாஸ் சிலிண்டர் தீர்ந்து விட்டது. அதனால் இனிமேல் தோசை சுட்டு தர முடியாது என கூறியுள்ளார். அப்போது கணேசன் விறகு அடுப்பில் தோசை சுட்டு தரும்படி கூறினார். அதற்கு மாதம்மாள் நான் இப்போது தான் வேலைக்கு சென்று வீட்டிற்கு வந்துள்ளேன். என்னால் சுட்டு தர முடியாது எனக்கூறியதாக தெரிகிறது.
கத்தியால் சரமாரி தாக்குதல்:
இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இந்த தகராறு முற்றியதில்
ஆத்திரம் அடைந்த கணேசன், மாதம்மாளை சரமாரியாக தாக்கியுள்ளார். பிறகுஆத்திரத்தில் அங்கிருந்த கத்தியை எடுத்து மாதம்மாளின் தலை, கையில்
வெட்டியுள்ளார். அதனை தடுக்க வந்த மருமகள் விஜயலட்சுமியையும், அவருடைய 2 வயது குழந்தையான தனிக்ஷாவையும் கத்தியால் கணேசன் தாக்கியுள்ளார்.
மனைவி உயிரிழப்பு:
அப்போது அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கதினர் படுகாயம் அடைந்த மூவரையும் மீட்டு, சிகிச்சைக்காக மத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். பிறகு மேல் சிகிச்சைக்காக அவர்கள்
கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி
வைக்கப்பட்டனர். அங்கு ஆபத்தான நிலையில் உள்ள குழந்தைக்கு தீவிர சிகிச்சை.அளிக்கப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக விஜயலட்சுமி கொடுத்த புகாரின் பேரில், மத்தூர் போலீசார்
விசாரணை நடத்தி கணேசனை கைது செய்தனர். இந்த நிலையில் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த. மாதம்மாள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.