தடை செய்யப்பட்ட பட்டாசு வெடித்தால் அதற்கு போலீஸ்தான் முழுப்பொறுப்பு!

தீபாவளி நெருங்கிவிட்டதால் ஒவ்வொரு மாநிலத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தின் தலைநகரான சென்னையில் காவல் ஆணையர் சில விதிமுறைகளை கூறியுள்ளார்.தீபாவளி

இதுபோன்று ஒவ்வொரு மாநிலத்திலும் விதிமுறைகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் உச்சநீதிமன்றம் சரவெடிக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

அதன்படி சரவெடியை உற்பத்தி செய்யவோ, விற்பனை செய்யவோ, வாங்குவோ உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. பட்டாசு வெடிப்பதற்கான நேரம் கட்டுப்பாட்டை நீக்க கோரிய வழக்கில் உச்ச நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.

superme courtதடை செய்யப்பட்ட பட்டாசு வெடித்தால் அதற்கு காவல்துறை பொறுப்பேற்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. அறிவிக்கப்பட்ட உத்தரவை கட்டாயம் கடைப்பிடிக்க அனைத்து மாநில அரசுகளும் உறுதி செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

பேரியம் நைட்ரேட் கொண்டு பட்டாசு தயாரிக்கவும், விற்கவும், வெடிக்கவும் தடை செய்துள்ளது உச்சநீதிமன்றம். போலியான பசுமை பட்டாசு தயாரித்தால் நிறுவனத்தின் உரிமம் ரத்து செய்யப்பட்டு அந்த நிறுவனத்தின் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment