போகிப்பண்டிகை கொண்டாடப்படுவதன் நோக்கம் இதுதானா….! தை பிறந்தால் வழி பிறக்கும்… அது எப்போன்னு தெரியுமா?

 

மார்கழி தான் ஓடிப்போச்சு…போகியாச்சு..ஹோய்….நாளைக்குத் தான் தைப்பொறக்கும் தேதியாச்சு…ஹோய் என்று தளபதி படத்தில் ஒரு பாடல் இடம்பெற்று இருக்கும். இது போகிப்பண்டிகையின் சிறப்பை வெகு அழகாக எடுத்துச் சொல்லும்.

வீட்டுல நேத்து வர கூட்டின குப்பைகள போட்டு மூட்டையா கட்டி வெச்சு மூலையில் தீய வெச்சு மூட்டு…போகட்டும் தீமை எல்லாம்…சேரட்டும் நன்மை எல்லாம் சாமி என்று ஒரு வரி வரும். அத்தகைய சிறப்பு வாய்ந்த போகிப்பண்டிகை நாளை மறுநாள் (14.1.2023) அன்று கொண்டாடப்படுகிறது. தை மாதத்தின் துவக்கமாகவும், மார்கழியின் நிறைவு நாளாகவும் வரக்கூடியது தான் போகிப்பண்டிகை.

pogi2
pogi2

போகி என்றாலே வீட்டில உள்ள பழையனவற்றைக் கழிக்க வேண்டும். ஏதாவது ஒரு கெட்ட விஷயத்தையாவது தூக்கிப் போட வேண்டும் என்பதையே இது சுட்டிக்காட்டுகிறது. அதே போல நமக்கான நல்ல ஒரு விஷயத்தைப் பின்பற்ற வேண்டும் என்பதே இந்தப் பண்டிகையின் சிறப்பு.

குல தெய்வத்தை வீட்டுக்கு அழைத்து வழிபட வேண்டிய அழகான திருநாள். பண்டைய காலத்தில் நம் முன்னோர்கள் வீட்டையே காலி பண்ணிடுவாங்க. பூஜை அறையையும் சுத்தம் பண்ணுவாங்க. அதனால நம்ம வீட்டு தெய்வத்தைத் திரும்பவும் அழைக்கணும் என்பதற்காக மாலை நேரத்தில் பூஜை பண்ணி வழிபட வேண்டும்.

Kulatheiyvam
Kulatheiyvam

இரவு 7 மணிக்கு மேல 9 மணி வரை சாமி கும்பிடலாம். மாலையில் வெள்ளை சாதத்தை குலையா வடித்து அதைப் படைப்பில் வைக்க வேண்டும். அதன் மேல் வெல்லம், வாழைப்பழங்களைத் துண்டுகளாக வெட்டி வைக்க வேண்டும்.

நமக்கு அம்பிகை தெய்வமாக இருந்தால் ஒரு கலசம் வைக்கலாம். ஒரு சொம்பை எடுத்து அதில் தண்ணீர் நிரப்பி கொஞ்சம் மஞ்சள் தூள், வேப்பிலை வைக்கணும். ஒரு பூ வைத்தால் போதும். இது தான் நாம வைக்க வேண்டியது.

அப்புறம் இளநீர், துள்ளு மாவு, வாழைப்பழம், வெத்தலைப்பாக்கு வைத்து வழிபட வேண்டும். குலதெய்வத்தை அழைக்கணும். எங்களுக்கு குடும்பத்தில் நிரந்தர மகிழ்ச்சி வரணும். நிரந்தர மன அமைதி, வாழ்க்கைக்கான நல்ல வழியைக் காட்டுங்க…எங்க வீட்டில் எழுந்தருள்க என மனமுருக குலதெய்வத்தை வேண்டணும்.

சாமிக்கு வைத்த நைவேத்தியத்தை நாமே பிரசாதமாக எடுத்துக் கொள்ளலாம். வீட்டுல இருக்குற எல்லாருமே அதை சாப்பிடலாம். இந்த வேலையை செய்து விட்டால் தான் நம் வீடு மறுநாள் பொங்கலுக்கு முழுமையாக தயாராகி விட்டது என்று அர்த்தம்.

போகிக்கு கொளுத்த வேண்டும் என்பதற்காக கையில் கிடைத்ததை எல்லாம் போட்டு எரிக்கக்கூடாது. காற்று மாசுபடாதவாறு பொருள்களை எரிக்க வேண்டும். இல்லாதவர்களுக்கு நம் வீட்டில் உள்ள பழைய துணிமணிகளைக் கொடுத்து உதவலாம்.

இந்த வழிபாட்டுக்குப் பின்னர் நம் குலதெய்வத்தின் அருளையும், இஷ்ட தெய்வத்தின் ஆசியையும் பெற்றுக் கொள்ளலாம். அப்போ தான் தை பிறந்தால் வழிபிறக்கும்னு நம்ம முன்னோர்கள் அப்பவே சொல்லியிருக்காங்க. போகிப்பண்டிகையை முறைப்படி கொண்டாடி இனிய தைப்பொங்கலுக்குத் தயாராகுங்க.

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews