இரண்டு தலைமுறையாக பாட்டெழுதிய வாலிக்குக் கிடைக்காத அந்த வார்த்தை.. ஆடுகளத்தில் பாடலாக்கி அசத்திய சிநேகன்..

வாலிபக் கவிஞர் வாலி என்று கவிஞர் வாலியை அழைப்பது ஒன்றும் சும்மா கிடையாது. எம்.ஜி.ஆர்., சிவாஜி காலந்தொட்டு அனிருத் வரை இளமைத் துள்ளலுடனும், சமகாலத்திற்கு ஏற்ற வகையிலும் பாடல்களை எழுதுவதில் கண்ணதாசனுக்கு அடுத்த இடத்தில் இருப்பவர். தூய தமிழாகட்டும், ஆங்கில கலப்பு பாடல்களாகட்டும், வட்டார வழக்கு பாடல்கள் ஆகட்டும் வாலிக்கு நிகர் வாலியே. எம்.ஜி.ஆரின் பெரும்பாலான வெற்றிப் பாடல்கள் வாலியின் பேனாவில் உருவானவையே..

அப்பேற்றபட்ட கவிஞர் வாலியே பாடலாசிரியரும், கவிஞருமான சினேகனை அவரே போன் செய்து ஒரு பாடலுக்காக பாராட்டியிருக்கிறார். அதுவும் எப்படி தெரியுமா? இரண்டு தலைமுறையாக பாட்டெழுதும் எனக்குக் கூட இந்த வார்த்தை தோன்றவில்லை. பாடல் அருமையாக உள்ளது என சிநேகனைப் பாராட்டியுள்ளார். அப்படி சிநேகன் எழுதிய அந்தப் பாடல் எது தெரியுமா? ஆடுகளம் படத்தில் இடம்பெற்ற யாத்தே யாத்தே என்னாச்சோ.. என்ற பாடல்தான் அது.

பிரகாஷ்ராஜ் முதல் மனைவி மறுமணம் செய்யாததற்கு காரணம் இது தான்…

இப்பாடலில் இடம்பெற்ற வரிகளான ‘உன்னை வெள்ளாவி வச்சுத்தான் வெளுத்தாய்ங்களா..? இல்ல வெயிலுக்கு காட்டமா வளர்த்தாய்ங்களா…’ என்ற வரிகள் தான் வாலிக்கு மிகவும் பிடித்துப் போக கவிஞர் சினேகனுக்கு உடனடியாக போனைப்போட்டு பாராட்டியிருக்கிறார். இந்த வரிகள் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. இரண்டு தலைமுறைகளாகப் பாட்டெழுதும் எனக்குக் கூட இந்த வார்த்தை நினைவுக்கு வரவில்லை. பாடல் பற்றிய விமர்சனம் வரும். அதனால் பராயில்லை. ஒரு வெள்ளைக்காரப் பெண்ணின் அழகை வர்ணிக்க இதை விட சிறந்த வட்டார வழக்கு வார்த்தைகளே கிடையாது என்று பாராட்டியிருக்கிறார் வாலி.

இதேபோல் சாமி படத்தில் இடம்பெற்ற ‘கல்யாணம் தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா..’ பாடல் வெளிவந்த போதும் சினேகனைப் பாராட்டியிருக்கிறார் வாலி. ஆடுகளம் படத்தில் இடம்பெற்ற யாத்தே யாத்தே பாடல் படத்தில் ஆங்கிலோ இந்தியன் பெண்ணாக வரும் டாப்ஸியின் அழகைப் பார்த்து தனுஷ் மதுரை வட்டார வழக்கில் இந்தப் பாடலைப் பாடுவதாக அமைந்திருக்கும். இந்தப் பாடல் வெளிவந்த போது மேற்சொன்ன வரிகள் மிகவும் பிரபலமானது குறிப்பிடத்தக்கது. இன்றும் யாராவது அழகான சிவப்பு நிறம் கொண்ட பெண்களைப் பார்த்தால் இந்தப் பாடல்தான் ஞாபகத்திற்கு வரும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...