ஐப்திக்கு வந்த கண்ணதாசன் வீடு.. விரக்தியின் உச்சத்தில் கண்ணதாசன் எழுதிய பாடல்!

கவிஞர் கண்ணதாசன் தன் வாழ்வின் ஒவ்வொரு சூழ்நிலையிலும் தானே உணர்ந்து எழுதிய பாடல்கள் பல. தன் வாழ்வில் ஏற்பட்ட சோகம் அந்த மனநிலை பிறருக்கு ஏற்பட்டால் எப்படி உணர்வார்கள் என்று தன் பேனா முனைகளில் பாடலாக எழுதி வாழ்வின் தத்துவத்தை உணர்த்தியவர். இப்படி அவர் தன் வாழ்வில் ஏற்பட்ட ஒரு இக்கட்டான அனுபவத்திலிருந்து மீண்ட தருணத்தில் ஒரு தத்துவப் பாடலை எழுதியிருக்கிறார்.

கண்ணதாசன் தான் எழுதிய ஊமையன் கோட்டை கதையை படமாக எடுக்க விரும்பியிருக்கிறார். இதற்காக எம்.ஜி.ஆரிடம் கால்ஷீட் வாங்கி இரவு பகல் பாராமல் படமாக்கினார்கள். முழுப் படப்பிடிப்பும் முடிந்த பின்னரும் எம்.ஜி.ஆர் நடித்த சில காட்சிகள் படமாக்க வேண்டியிருந்தால் மீண்டும் அவரை அணுக அவர் மறுத்துவிட்டதாகத் தெரிகிறது.

இதனால் ஊமையன் கோட்டை படம் ஊமையாக நின்றது. படம் அப்படியே டிராப் ஆனது. இதனால் கண்ணதாசன் பெரும் நஷ்டமடைந்தார். எனினும் தனது திறமையைக் காட்ட விரும்பிய கண்ணதாசன் மீண்டும் மாலையிட்ட மங்கை திரைப்படத்தைத் தயாரித்துள்ளார்.  இப்படத்தில் தான் மனோராமா அறிமுகமானார்.

ஹீரோவாக தனது முதல் படத்திலேயே உயிரைப் பணயம் வைத்த எம்.ஜி.ஆர்., கொஞ்சம் மிஸ் ஆனாலும் நேர்ந்திருக்கும் விபரீதம்

இந்தப் படத்தின் அனைத்துப் பணிகளும் முடிந்த நிலையில் அதை அப்படியே தனது சகோதரருக்கு லாபம் இல்லாமல் கொடுத்துள்ளார். ஆனால் அதை வெளியிட்டு அவர் மிகப்பெரும் லாபம் அடைந்தார்.

இப்படி மேற்கூறிய 2 படங்களால் தொடர்ச்சியாக நஷ்டத்தில் இருந்த கண்ணதாசனுக்கு அதே நேரத்தில் தான் பணம் கொடுக்க வேண்டிய ஒருவர் நீதிமன்றம் வரை சென்றதால் வீடும் ஜப்தி அறிவிப்பில் செல்ல கண்ணதாசன் நிலைகுலைந்திருக்கிறார்.

அப்போது பாவ மன்னிப்பு படத்தில் பாட்டெழுத அழைப்பு வந்திருக்கிறது. அப்போது அவர் வீட்டு ஏல அறிவிப்புக்காக தமுக்கு அடிக்க, உடனே தமுக்கு அடிப்பவரிடம் 10 ரூபாய் கொடுத்து அதை நிறுத்தச் சொல்லியிருக்கிறார். அப்போது அவர் எழுதிய பாடல்தான் “சிலர் சிரிப்பார்.. சிலர் அழுவார்… நான் சிரித்துக் கொண்டே அழுகின்றேன்…“ என்ற பாடல் உருவாகியிருக்கிறது.

இந்த பாடலை எழுதி முடித்த கண்ணதாசன், உடனடியாக ஒரு ஃபைனான்சியரை சந்தித்து பணம் பெற்று நீதிமன்றத்தில் கட்டி தனது வீட்டை மீட்டுள்ளார். இந்தத் தகவலை அவரது மகன் அண்ணாத்துரை கண்ணதாசன் யூடியூப் சேனல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...