கவிஞர் பிரான்சிஸ் கிருபா காலமானார்: திரையுலகினர் இரங்கல்!

bf0dc706783ee3cb16e7a62a40ee176e

பிரபல கவிஞர் மற்றும் பாடலாசிரியர் பிரான்சிஸ் கிருபா அவர்கள் இன்று காலமானதை அடுத்து திரையுலகினர் மற்றும் கவிஞர்கள் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர் 

நெல்லையைச் சேர்ந்த கவிஞர் பிரான்சிஸ் கிருபா கவிதைகள், புதினம், திரைப்பட பாடல்கள் ஆகியவற்றை எழுதி உள்ளார் என்பதும் இவரது கன்னி என்ற புதினத்திற்கு விருது கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 

சுசீந்திரன் இயக்கிய ’வெண்ணிலா கபடி குழு’ ’அழகர்சாமியின் குதிரை’ உள்பட ஒரு சில திரைப்படங்களில் இவர் பாடல்கள் எழுதி உள்ளார். அதுமட்டுமின்றி காமராஜரின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்திற்கு திரைக்கதை வசனம் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் கவிஞர் பிரான்சிஸ் கிருபா திடீரென இன்று காலை மரணமடைந்தார். அவரது இறுதி சடங்கு அவரது சொந்த ஊரான நெல்லையில் நடைபெற உள்ளதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். பிரான்சிஸ் கிருபாவின் மரணத்திற்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.