Connect with us

அடிதூள்: போக்சோ வழக்கை வாட்ஸ் ஆப் மூலம் இனி உடனுக்குடன் தகவல் தெரிந்து கொள்ளலாம், பாதிக்கப்பட்டவர்களுக்கு புது வசதி

pocso

தமிழகம்

அடிதூள்: போக்சோ வழக்கை வாட்ஸ் ஆப் மூலம் இனி உடனுக்குடன் தகவல் தெரிந்து கொள்ளலாம், பாதிக்கப்பட்டவர்களுக்கு புது வசதி

POCSO வழக்குகளின் நிலை குறித்து பாதிக்கப்பட்டவர் இனி உடனுக்குடன் தகவல் தெரிந்து கொள்ளலாம் தென் மண்டல காவல்துறை IG அஸ்ரா கார்க் தகவல்

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு (POCSO) எதிராக அனைத்து சட்ட நடவடிக்கைகளையும் வழக்கு விசாரனையும் தகவல் தொரிந்து  கொள்ள whatsapp வசதியை தென்மண்டல காவல்துறை அறிமுகம் செய்துள்ளது

தற்போது திருநெல்வேலி தென்காசி தூத்துக்குடி கன்னியாகுமரி மாவட்டங்களில் செயல்பட்டு வருவதாக தென் மண்டல காவல்துறை தலைவர் அஸ்ரா கார்க் தகவல் பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான வழக்குகளின் நிலையை தெரிந்து கொள்ள இதுபோன்று வசதி வேறு மாநிலங்களிலோ  மாவட்டங்களிலோ இல்லை –  IG அஸ்ரா கார்க்

மேலும் தேனி திண்டுக்கல் ராமநாதபுரம் சிவகங்கை மதுரை ஆகிய மாவட்டங்களிலும் செயல்படுத்தப்பட உள்ளது என்றும் தகவல். குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்ற வழக்குகளில் ( POCSO ), வழக்குகள் நீதிமன்ற விசாரணையில் இருக்கும்போது ,

வழக்கு விசாரணைக்கு வரும் நாட்களின் ஒவ்வொரு நிகழ்வுகளையும் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது புகார்தாரர்கள் தெரிந்து கொள்ளக்கூடிய வகையில் அவர்களின் அலைபேசிக்கு வாட்ஸ்ஆப் அல்லது குறுஞ்செய்தி மூலம் தெரியப்படுத்தும் முறை முதன்முதலாக திருநெல்வேலி , தென்காசி , தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டுள்ளது .

இம்முறையை தொடர்ந்து கண்காணிக்கவும் , செயல்படுத்தவும் மாவட்டத்திற்கு ஒரு குழு உருவாக்கப்பட்டு , செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களது வழக்கின் நிலை  தெரிந்துகொள்ள ஏதுவாக உள்ளது .

வழக்கின் புகார்தாரர்கள் அல்லது அவ்வழக்கில் பாதிக்கப்பட்டவர்கள் தங்களால் முறையிடப்பட்டு பதிவு செய்யபட்ட வழக்கின் நிலை பற்றியும் , அவ்வழக்கின் நிலை பற்றியும் தெரியாமல் இருந்து வந்தனர் . தற்போது அந்நிலை மாற்றப்பட்டு அவர்கள் விழிப்புணர்வுடன் இருக்க வழிவகை ஏற்படுத்தபட்டுள்ளது .

மேலும் இந்த திட்டம் தென்மண்டலத்தின் பிற மாவட்டங்களான தேனி , திண்டுக்கல் , இராமநாதபுரம் , சிவகங்கை , மதுரை மற்றும் விருதுநகர் மாவட்டங்களிலும் அடுத்தடுத்து இம்முறை செயல்படுத்தப்படவுள்ளது .என தென்மண்டல காவல்துறை தலைவர் அஸ்ரா கார்க் தகவல்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top