ஸ்டாலினை தேடி சென்ற பாமக! 10.5% உள் இடஒதுக்கீடு கோரிக்கை!!

கடந்த ஆட்சியில் வன்னியருக்கு 10.5%  இட ஒதுக்கீடு அதிமுக அரசு ஒதுக்கி இருந்தது.சில நாட்களுக்கு முன்பு அதிமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட வன்னியருக்கான 10.5% உள் இட ஒதுக்கீட்டை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.ஜிகே மணி

இதனால் தமிழகத்தில் உள்ள பல பகுதிகளில் பாமகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த நிலையில் வன்னியர் இட ஒதுக்கீடு தொடர்பாக முதலமைச்சருக்கு பாமக சார்பில் கோரிக்கை விடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதன்படி வன்னியர்கான 10% இட ஒதுக்கீடு தொடர்பாக முதலமைச்சர் மு க ஸ்டாலினிடம் பாமகவினர் மனு அளித்துள்ளனர். 10.5% உள் ஒதுக்கீட்டை மீண்டும் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியுள்ளனர்.

சென்னையில் முதலமைச்சர் மு க ஸ்டாலினை நேரில் சந்தித்து பாமக தலைவர் ஜி.கே மணி இத்தகைய கோரிக்கை வைத்தார். அதன்படி வன்னியர் உள் ஒதுக்கீடு தொடர்பாக ராமதாஸ் அளித்த அறிக்கையை முதலமைச்சரிடம் கொடுத்துள்ளோம் என்று பாமக தலைவர் ஜி.கே மணி கூறியுள்ளார். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச்சர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார் என்று ஜிகே மணி கூறியுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment