இதுவே கடைசி முறையாக இருக்கட்டும்… தக்காளி விவசாயிகளுக்காக கொந்தளித்த ராமதாஸ்!

தக்காளி விலை வீழ்ச்சியால்,விவசாயிகள் கடனாளியாகியுள்ளனர். அவர்கள் அடுத்த முறை தக்காளி சாகுபடி செய்ய அதிக வட்டிக்கு மீண்டும் கடன் வாங்குவதைத் தவிர வேறு வழியில்லை என பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தக்காளி விலை வீழ்ச்சியால், மேற்கு மாவட்டங்களில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்ட தக்காளியை விவசாயிகள் அறுவடை செய்யவில்லை என வருத்தம் தெரிவித்துள்ளார்.

கடந்த நவம்பர், டிசம்பர் மாதங்களில் ஒரு கிலோ தக்காளி 160 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டபோதும் விவசாயிகளுக்கு ஒரு கிலோ தக்காளிக்கு 35 ரூபாய்க்கு மேல் கிடைக்கவில்லை எனவும் இடைத்தரகர்கள் தான் பயனடைந்தார்கள் எனவும் ராமதாஸ் கூறியுள்ளார்.

தக்காளி விலை வீழ்ச்சியால்,விவசாயிகள் கடனாளியாகியுள்ளனர். அவர்கள் அடுத்த முறை தக்காளி சாகுபடி செய்ய அதிக வட்டிக்கு மீண்டும் கடன் வாங்குவதைத் தவிர வேறு வழியில்லை எனும் அவல நிலையில் தான் விவசாயிகள் உள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் தக்காளி உழவர்கள் பாதிக்கப்படுவது இதுவே கடைசி முறையாக இருக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ள ராமதாஸ், தக்காளி விலை வீழ்ச்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டை வழங்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

தக்காளி உள்ளிட்ட காய்கறிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயம், சிறப்பு மண்டலம் உள்ளிட்ட திட்டங்களை தமிழக அரசு விரைந்து செயல்படுத்துவதற்கான அறிவிப்பை வேளாண் நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தின் பதிலுரையில் அறிவிக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment