இதுவரை இந்தியாவை ஆண்ட பிரதமர்களுக்கு இப்படிப்பட்ட குளறுபடிகள் ஏற்பட்டதில்லை. பஞ்சாபில் 42000 கோடி அளவில் நலத்திட்ட உதவிகளை துவங்கி வைக்கப்போன பிரதமரின் காரை விவசாயிகள் மறித்த சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.
ஒரு பிரதமருக்கே நாட்டில் பாதுகாப்பு இல்லையா என்ற கேள்விகளையும் அது எழுப்பியது.
பிரதமர் வருகிறார் என்று தெரிந்தும் சரியான பாதுகாப்பு விதிமுறைகளை போலீசார் வகுக்கவில்லை என தற்காலிகமாக ஏ.எஸ்.பி ஒருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
மேலும் முதல்வர் இது குறித்த தனி விசாரணைக்குழுவையும் ஏற்படுத்தியுள்ளார்.
பிரதமரின் பாதுகாப்பில் ஏற்பட்ட குளறுபடிகள் குறித்து விசாரித்த மத்திய அரசுவும் இது குறித்து விசாரிக்க ஒரு தனிக்குழுவை அமைத்க்துள்ளது.
மத்திய உள்துறை அமைச்சகம் இது தொடரபாக விசாரிக்க மூன்று பேர் கொண்ட விசாரணைக் குழுவை அமைத்துள்ளது. இதற்கு சுதிர் குமார் சக்சேனா தலைமை வகிக்கிறார். குழுவில் உளவுத் துறை இணை இயக்குநர் பல்பீர் சிங் மற்றும் சிறப்பு பாதுகாப்புக் குழுவின் தலைவர் எஸ்.சுரேஷ் ஆயியோர் இடம்பெற்றுள்ளனர்.