பிரதமரின் பஞ்சாப் பயணத்தில் ஏற்பட்ட பாதுகாப்பு குளறுபடிகள் குறித்து விசாரணை கமிஷன்

இதுவரை எந்த ஒரு பிரதமருக்கும் இப்படி ஒரு நிலை இந்தியாவில் ஏற்பட்டதில்லை என சொல்லும் விதத்தில் நேற்று பஞ்சாபில் நடந்த நிகழ்வு அமைந்துள்ளது.

42000 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டங்களை தொடங்கி வைக்க சென்ற பிரதமர் நரேந்திர மோடியின்  கார் போன பாதையை பஞ்சாப் விவசாயிகள் வழி மறித்துள்ளனர்.

இதனால் பிரதமரின் கார் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டதால் அவர் உடனடியாக விமான நிலையம் சென்று டெல்லி சென்றார்.

சென்ற உடன் அவர் பஞ்சாப் முதல்வருக்கு நன்றியும் தெரிவித்தார். இதனிடையே இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் கட்சிதான் இப்படி மோசமான விசயத்தை செய்கிறது என பரவலாக விமர்சனங்கள் எழுந்தன.

இந்த நிலையில் பிரதமர் விமர்சனத்திற்கு உள்ளவராகவே இருந்தாலும் நாட்டின் பிரதமருக்கே  பஞ்சாப் அரசு இப்படியொரு பாதுகாப்பு குளறுபடியை செய்திருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மத்திய உள்துறை அமைச்சகம், பாதுகாப்புத்துறை அமைச்சகம் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்தது.

இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக இது குறித்து விசாரிக்க உயர்மட்டக்குழு ஒன்றை அமைத்து உத்தரவிட்டுள்ளது பஞ்சாப் அரசு.

விசாரணை செய்து மூன்று நாட்களில் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என விசாரணை குழு அறிவித்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment