பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீரா பென் மோடி (வயது 99) கடந்த ஜூன் மாதம் தனது பிறந்த நாளை கொண்டாடினார். இந்நிலையில் அவரது உடல்நிலை நேற்றிரவு பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலைடில் அகமதாபாத்தில் உள்ள ஐநா மேத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், இன்னும் எந்தமாதிரியான பிரச்சனை என்பது குறித்த தகவல் இன்னும் வெளியிடப்படவில்லை.
தற்போது குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் மோடியின் தாயாருடன் இருப்பதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக மருத்துவ மனையைச் சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
அதே போல் டெல்லியில் இருக்கும் பிரதமர் மோடி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் தாயாரை காண தனி விமானத்தில் அகமதாபாத் புறப்பட்டு இருப்பதாக தெரிகிறது.
இந்த சூழலில் பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதனால் பாஜகவினர் நிம்மதி அடைந்துள்ளனர்.