Connect with us

பிரதமர் மோடி பிறந்தநாள்: குழந்தைகளுக்கு தங்க மோதிரம்!!

202112181103494775 Prime Minister Modi is reportedly coming to Chennai to open SECVPF

தமிழகம்

பிரதமர் மோடி பிறந்தநாள்: குழந்தைகளுக்கு தங்க மோதிரம்!!

நாடு முழுவதும் இன்றைய தினத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் 72-வது பிறந்தநாள் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக சென்னையில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை பாஜகவினர் செய்து வருகின்றனர்.

அதன் படி, பிரதமர் மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு ராயபுரம் அரசு ஆர்.எஸ்.ஆர்.எம் மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு 2 கிராம் தங்க மோதிரம் வழங்கப்படுவதாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக ராயபுரம் அரசு ஆர்.எஸ்.ஆர்.எம் மருத்துவமனையில் 10-15 குழந்தைகள் பிறக்கின்றனர். இந்நிலையில் குழந்தைகளுக்கு வழங்கும் மோதிரமானது இலவசமல்ல என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அதோடு மோடியின் பிறந்த நாளில் குழந்தைகளை வரவேற்பதற்கு வழங்கப்படுவதாக அமைச்சர் எல்.முருகன் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து சென்னை கொளத்தூர் பகுதியில் சுமார் 720 கிலோ மீன்கள் இலவசமாக வழங்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top