அம்மாவை பார்க்க போகும் போது கூட இப்படியா?; பிரதமரின் செயலால் அதிர்ச்சி – வைரல் வீடியோ!

பிரதமர் மோடி எங்கே சென்றாலும் கேமரா யூனிட், கலர்ஃபுல் காஸ்ட்டியூம் இல்லாமல் செல்லமாட்டார் என்ற விமர்சனம் உண்டு. இந்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தனது அம்மாவை பார்க்கவும் பிரதமர் கேமராக்கள் சூழ சென்ற சம்பவம் காண்போரை அதிர வைத்துள்ளது.

இருதினங்களுக்கு முன்பு, கர்நாடக மாநிலம் மைசூரு-நஞ்சனகுடு நெடுஞ்சாலையில் அவர்கள் சென்ற கார் டிவைடரில் மோதி விபத்துக்குள்ளானது. அப்போது பிரஹலாத் மோடியின் மனைவி, மகன், மருமகள், பேரன் ஆகியோர் இருந்துள்ளனர். அனைவரும் Mercedes-Benz SUV யில் பந்திபுராவுக்குச் சென்று கொண்டிருந்தபோது விபத்து நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பிரஹலாத் மோடியின் கார் விபத்துக்குள்ளானதை மைசூர் தெற்கு போலீசார் உறுதிப்படுத்தினர்.

பிரஹலாத் மோடி மற்றும் அவரது குடும்பத்தினர் ஜேஎஸ்எஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த விபத்தில் பிரஹலாத் மோடி குடும்பத்தினர் பயணித்த காரின் முன்பகுதி சேதமடைந்தது.

இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது பிரதமர் மோடியின் தாயார் உடல் நிலை குறித்து வெளியாகியுள்ள தகவல் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 99 வயதான அவரது தாயார் ஹீராபென் மோடிக்கு நேற்றிரவு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து அவர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அகமதாபாத்தில் உள்ள யுஎன் மேத்தா இதயவியல் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள ஹீராபென்னின் உடல் நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளது சற்றே ஆறுதல் அளிக்கும் செய்தியாக அமைந்துள்ளது.

இந்நிலையில் பிரதமர் மோடி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தனது தாயாரை பார்ப்பதற்காக சென்றுள்ளார். அங்கு அவர் மருத்துவமனைக்கு சென்று தாயை சந்திக்கும் காட்சிகளை படம் பிடிக்க இரண்டு கேமரா மேன்களும் உடன் சென்றுள்ளனர். முன்னால் ஒருவர், பின்னால் ஒருவர் என இரண்டு கேமராமேன்கள் செல்ல, நடுவில் பிரதமர் மோடி மாஸ்க் அணிந்த வண்ணம் நடந்து செல்லும் காட்சிகள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.