Entertainment
பிரதமர் மோடியுடன் செல்ஃபி எடுத்துக்கொண்ட நட்சத்திரங்கள்
பாலிவுட் நடிகர் நடிகைகள் சிலர், டெல்லியில் பிரதமர் மோடியைச் சந்தித்தபோது எடுத்துக் கொண்ட செல்பி புகைப்படம் வெளியாகியுள்ளது. பாலிவுட் இளம் நட்சத்திர நடிகர், நடிகைகள் நேற்று டெல்லியில் பிரதமர் மோடியைச் சந்தித்துப் பேசினர்.

அப்போது, திரைப்படங்கள் நாட்டின் வளர்ச்சிக்கு ஆற்றி வரும் பங்கு, கலாச்சாரத்தில் ஏற்படுத்தும் தாக்கம் பற்றி, கலந்துரையாடியதாக கூறப்படுகிறது.
பிரதமரின் அழைப்பை ஏற்று டெல்லி சென்ற பாலிவுட் நட்சத்திரங்கள் விவரம் ரன்வீர் சிங், அலியா பட், ரன்பீர் கபூர், கரண் ஜோஹர் உள்ளிட்ட நடிகர், நடிகைகள், மோடியுடன் ஒன்றாக இணைந்து செல்பி எடுத்துக் கொண்டனர். அந்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
சமூக வலைதளங்களில் இப்புகைப்படம் அதிக லைக்குகள் வாங்கி வருகின்றன.
