பிரதமர் மோடி தரும் டிப்ஸ்! வீடு வீடாக சென்று தடுப்பூசி போடுங்கள்!!

தற்போது நம் தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி மையங்கள் சனிக்கிழமை தோறும் அமைக்கப்பட்டு தொடர்ந்து செல்லப்படுகின்றன.  இந்தியாவில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக 100 கோடி பேர் தடுப்பூசி செலுத்துவோரின் எண்ணிக்கை தாண்டியது என்பதும் பல நாடுகளை ஆச்சரியப்படுத்தியது.மெகா தடுப்பூசி முகாம்

இருப்பினும் ஒரு சில பகுதிகளில் கொரோனா  தடுப்பூசி எடுத்துக்கொள்ளும் மாவட்டங்களின் எண்ணிக்கை குறைவாகவே காணப்படுகிறது. இந்த நிலையில் பாரத பிரதமர் நரேந்திர மோடி சில அறிவுரைகள் வழங்கியுள்ளார்.

அதன்படி வீடு வீடாக சென்று கொரோனா  தடுப்பூசிகள் போடுங்கள் என்று கூறியுள்ளார். கொரோனா  மையங்கள் மட்டுமின்றி வீடு வீடாக சென்று அங்கு கொரோனா தடுப்பூசி  போடவேண்டும் என்று பாரத பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தியுள்ளார்.

பிரதமர் மோடிகொரோனா  தடுப்பூசி தொடர்பாக மக்களிடம் உள்ள குழப்பத்தை உள்ளூர் தலைவர்கள் மூலம் தீர்க்க வேண்டும் என்று பாரத பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தியுள்ளார்.

அதோடு மட்டுமில்லாமல் மாவட்டங்களில் புதுமையான வழி முறைகளை பின்பற்றி தடுப்பூசி போடுவதை அதிகப்படுத்த வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியர்களுக்கு பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.

குறைவாக கொரோனா தடுப்பூசி செலுத்தியுள்ள மாவட்டங்களின் ஆட்சியர்களுக்கு பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். 100 கோடி தடுப்பூசி போட்டதால் அலட்சியமாக இருத்தல் புதிய நெருக்கடியை உருவாக்கும் என்றும் பிரதமர் மோடி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment