பிரதமர் மோடி நாட்டுக்காக அதிகம் உழைத்துள்ளதாகவும் அவர் சிறிது காலம் ஓய்வு எடுக்க வேண்டும் என்றும் மோடியின் சகோதரர் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
குஜராத் மாநிலத்தில் சமீபத்தில் இரண்டு கட்ட தேர்தல் முடிவடைந்த நிலையில் இந்த தேர்தலில் பிரதமர் மோடி, அவருடைய தாய் மற்றும் சகோதரர்கள் உள்பட அனைவரும் வாக்களித்தனர்.
இந்த நிலையில் பிரதமர் மோடியின் மூத்த சகோதரர் சோமாபாய் ஓட்டு போட்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் எனது சகோதரர் நரேந்திரமோடியை சந்திப்பு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது என்றும் இருவரும் நீண்ட நாட்களுக்குப் பின்னர் ஒன்றாக அமர்ந்து தேனீர் அருந்தினோம் என்றும் குடும்பம் குறித்து பேசினோம் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் என் உடல் நிலையை மோடி விசாரித்தார் என்றும் மோடி செயல்பாட்டால் எங்கள் குடும்பம் மிகவும் மகிழ்ச்சி அடைந்து உள்ளது என்றும் தெரிவித்துள்ளார். இந்தநிலையில் கடந்த 2014 ஆம் ஆண்டுக்கு பின்னர் பிரதமர் மோடி நிறைய உழைத்து வருகிறார் என்றும் அவர் சிறிது காலம் ஓய்வு எடுக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம் என்றும் இதனை அவரிடமே தெரிவித்தோம் என்றும் சோமாபாய் தெரிவித்துள்ளார்.