Connect with us

பிரதமர் நாளை சென்னை வருகை-பாதுகாப்பு பணியில் 10,000 போலீசார்..!!

narendhra modi 1

தமிழகம்

பிரதமர் நாளை சென்னை வருகை-பாதுகாப்பு பணியில் 10,000 போலீசார்..!!

கடந்த சில தினங்களாகவே தமிழகத்தில் பிரதமர் வருகை வாய்ப்பு கிடைக்காமலே காணப்படுகிறது. ஏனென்றால் ஜனவரி மாதத்தில் பொங்கல் தினத்தை ஒட்டி பிரதமர் மோடி தமிழகம் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் நோய்த்தொற்று காரணங்களால் அவரின் வருகை ரத்தானது. அதன்பின்னர் எப்போது பிரதமர் நம் தமிழகத்தில் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென்று அறிவிப்பு வெளியானது.

அதன்படி மே இருபத்தி ஆறாம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வருகை என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதனால் சென்னையில் பாதுகாப்பு பணிகள் தீவிரமாக காணப்படுகிறது.

அதன்படி பிரதமர் நரேந்திர மோடி நாளை சென்னை வருவதை அடுத்து 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். பல்வேறு நலத்திட்டப் பணிகளை துவக்கி வைப்பதற்காக நாளைய தினம் சென்னை வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி. பிரதமரின் நாளைய வருகையால் பாஜகவினர் பெரும் உற்சாகத்தில் உள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top