சென்னை விமான புதிய முனையம் மற்றும் சென்னை கோவை வந்தே பாரத் ரயில் சேவை என பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள பிரதமர் நரேந்திர மோடி சென்னை வருகிறார். அவரது முழு நிகழ்ச்சி நிரல் குறித்து விரிவாக பார்க்கலாம்…
பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாட்டுக்கு இரண்டு நாள் பயணமாக இன்று தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே உள்ள பேகம்பட் விமான நிலையத்தில் இருந்து தனி விமானத்தில் மாலை 2:45 மணிக்கு சென்னை பழைய விமான நிலையம் வருகிறார்.
சென்னை பழைய விமான நிலையத்தில் பிரதமருக்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது.
அதன்பின்பு பிரதமர் சென்னை புதிய விமான நிலையம், சென்ட்ரல் ரயில் நிலையம், மயிலாப்பூர் ராமகிருஷ்ணா மடம், பல்லாவரம் ஆல்ஸ்ட்ராம் கிரிக்கெட் மைதானம் ஆகிய இடங்களில் நடக்கும்,4 நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு விட்டு, அன்று இரவு 7:45 மணிக்கு தனி விமானத்தில் கர்நாடக மாநிலம் மைசூர் சென்று, இரவு தங்குகிறார்.
மறுநாள் காலை மைசூரில் இருந்து ஹெலிகாப்டரில் தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டம் தெப்பக்காடு யானைகள் முகாமுக்கு செல்கிறார். அதன் பின்பு மீண்டும் ஹெலிகாப்டரில் மைசூர் செல்கிறார்.
இன்று பிற்பகல் 2.45 மணிக்கு தனி விமானத்தில் சென்னை வரும் பிரதமர் சென்னை மற்றும் புறநகரில் 5 மணி நேரம் காரில், ஹெலிகாப்டரில் பறந்தபடி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுவிட்டு இரவு 7:45 மணிக்கு தனி விமானத்தில், கர்நாடக மாநிலம் மைசூர் சென்று விடுகிறார்.
இதற்காக சென்னை விமான நிலையம் சென்ட்ரல் ரயில் நிலையம் மெரினா கடற்கரை பல்லாவரம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 20,000 மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் மேலும் பிரதமர் கலந்து கொள்ளும் அனைத்து இடங்களும் ஐந்து அடுக்கு பாதுகாப்பு வலையத்திற்க்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.