சென்னை மாமல்லபுரத்தில் வருகிற 28-ந்தேதி சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைப்பெறுகிறது. இந்த போட்டியில் 188 நாடுகளை சேர்ந்த செஸ் வீரர்கள், வீராங்கனைகள் உள்ளிட்ட 2,500க்கும் மேற்பட்டோர் பங்கேற்கின்றனர்.
இந்நிலையில் போட்டியில் பங்கேற்க வருபவர்களுக்கு வரவேற்பு, விருந்தோம்பல், கலை நிகழ்ச்சி, தங்கும் வசதி, உணவு, போக்குவரத்து, பாதுகாப்பு, உள்ளிட்டவைகளை கவனிக்க தமிழக அரசு சார்பில் 18 குழுக்கள் அமைக்கப்பட்டு இருந்தது.
இந்த போட்டியில் பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக தமிழகம் வருகை தந்து செஸ் போட்டிகளை தொடங்கி வைப்பதாக கூறப்படுகிறது.
இந்த சூழலில் பிரதமரின் வருகையையொட்டி சுமார் 6000 போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக விமான நிலையம், நேரு விளையாட்டு அரங்குகள் உள்ளிட்ட இடங்களில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது ஆக கூறப்படுகிறது.
மேலும், பிரதமர் தமிழகம் வருகை காரணமாக போக்குவரத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என சென்னை காவல்துறையினரிடம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.