பிரதமர் மோடியின் வாகனம் மறிப்பு- மிகப்பெரும் பாதுகாப்பு குளறுபடி உள்துறை அமைச்சகம் கருத்து

பிரதமர் மோடி இன்று பஞ்சாப் மாநிலத்துக்கு சென்றார் ஏற்கனவே பஞ்சாப் மாநில விவசாயிகள் விவசாய சட்டத்தை ரத்து செய்ய கோரி கடந்த வருடம் டெல்லியில் போராடினர்.

இந்த நிலையில் விவசாய சட்டத்தை சில நாட்களுக்கு முன் பிரதமர் மோடி ரத்தும் செய்துவிட்டார். இருப்பினும் சில விவசாயிகள் மோடிக்கு எதிராக இன்னும் போராடி வருகின்றனர்.

இன்று பஞ்சாப் மாநிலத்துக்கு பயணம் மேற்கொண்ட மோடி பஞ்சாபின் ஃபிரோஸ்பூரில் நடக்கும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில்  பங்கேற்று, ரூ.42,750 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவிருந்தார். இந்த நிலையில், மோடி தனது பஞ்சாப் பயணத்தை திடீரென ரத்துசெய்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

விவசாயிகள் பிரதமர் மோடியின் காரை மறித்ததாகவும் இதனால் பிரதமர் மோடி பயணத்தை ரத்து செய்துவிட்டு விமான நிலையம் சென்றதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

பஞ்சாப் மாநில அரசிடம் பிரதமர் வருவது தகவல் தெரிவிக்கப்பட்டும் பாதுகாப்பில் மிகப்பெரும் குளறுபடிகள் செய்துள்ளதாக உள்துறை அமைச்சகம் கவலை தெரிவித்துள்ளது.

இந்நிலையில் விமான நிலையம் வரை பத்திரமாக திரும்பியதற்கு பஞ்சாப் முதல்வருக்கு நன்றி என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment