பிரதமர் மோடி சகோதரர் சென்ற கார் விபத்து: என்ன ஆச்சு?

பிரதமர் மோடியின் சகோதரர் சென்ற கார் திடீரென விபத்துக்குள்ளானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

பிரதமர் மோடிக்கு பிரகலாத் மோடி என்ற சகோதரர் உள்ளார் என்பதும் அவர் தனது குடும்பத்துடன் இன்று மைசூர் மாவட்டம் பந்திபுரா என்ற பகுதியில் தனது காரில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது பிரதமர் மோடி சகோதரர் பிரகலாத் மோடியின் குடும்பத்தினர் சென்ற கார் திடீரென விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பிரகலாத் மோடி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளதாகவும் இதனை அடுத்து அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் பிரகலாத் மோடியின் பேரனுக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக இதனையடுத்து எலும்பு முறிவு மருத்துவர் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது .

இது குறித்த தகவல் அறிந்ததும் பிரதமர் மோடி மருத்துவமனையை தொடர்பு கொண்டு தனது சகோதரர் மற்றும் அவரது குடும்பத்தினரின் உடல்நலம் குறித்து விசாரித்து தகவல் வெளியாகியுள்ளன.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.