
தமிழகம்
அண்ணா பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு!!
நேற்றைய தினம் 44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியானது சென்னை மாமல்லபுரத்தில் தொடங்கியது. தொடக்க விழாவாக நேற்று நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நிகழ்ச்சிகள் வைக்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில் முதல் ஸ்டாலின் பட்டு வேஷ்டி, பட்டு சட்டை அணிந்து கொண்டு வந்திருந்தார். மேலும் அவருடன் பிரதமர் நரேந்திர மோடியும் கலந்து கொண்டிருந்தார். அந்த நிகழ்ச்சியில் மத்திய இணை அமைச்சர் முருகனும் கலந்து கொண்டிருந்தார்.
இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி இன்றைய தினம் மற்றும் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அதன்படி இன்று சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடக்கும் பட்டமளிப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்ற சிறப்புரை ஆற்றும் நிலையில் ஆளுநர் ரவி பட்டங்களை வழங்குகிறார். இந்த பட்டமளிப்பு விழாவில் மத்திய அமைச்சர் முருகனுடன் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியும் பங்கேற்கிறார்.
